மீட்பு பணியில் உதயநிதியுடன் வந்தது குத்தமா? மாமனிதனுக்கு அடுத்த ஸ்டோரி ரெடி

Rescue mission with Udayanidhi: தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் கிராமங்கள் எல்லாம் நீரில் மூழ்கி தத்தளிக்கிறது. இந்த சூழலில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது பிறந்த ஊரான தூத்துக்குடி அருகே உள்ள கருங்குளம் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபடுகிறார்.

மீட்பு குழுவினர் படகுகளின் மூலம் மக்களை மீட்கும் முயற்சியில் இருக்கின்றனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமானதால் இனி படகுகளால் முடியாது, ஹெலிகாப்டர் உதவி வேண்டும் என்றும் சமீபத்திய பேட்டியில் அரசிடம் மாரி செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் உதயநிதியை விட மாரி செல்வராஜுக்கு தூத்துக்குடி பழக்கப்பட்ட ஏரியா என்பதால், களத்தில் இறங்கி மீட்பு குழுவுடன் செயல்படுகிறார். உதயநிதிக்கும் மாரி செல்வராஜ் வேண்டிய ஆலோசனைகளை சொல்கிறார். ஆனால் இதை சோசியல் மீடியாவில் நெகட்டிவ்வாக சித்தரிக்கின்றனர்.

மீட்பு பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கே அறிவுரை கூறும் மாரி செல்வராஜ், கவர்மெண்ட்டின் ஏஜெண்டா? என்றும் நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். என்னதான் மக்களுக்கு உதவி செய்ய நினைத்தாலும், மாரி செல்வராஜ் ஒரு சினிமாக்காரர் தான் என்று முத்திரை குத்தி அவரை தவறாக பேசுகின்றனர். திமுக அரசு அதிகாரிகளிடம் உதவி கேட்காமல் சினிமாக்காரரிடம் எதற்கு உதவி கேட்கிறது? இன்னும் உதயநிதிக்கு சினிமா மோகம் மண்டையை விட்டுப் போகலையா? அமைச்சரான நீங்க அதிகாரிகளோடு ஆய்வு செய்யும்போது உங்களுடன் மீட்பு மேலாளர் ஏன் இல்லை? அதற்கு பதில் மாரி செல்வராஜை கூடவே கூட்டிக்கொண்டு சுற்றுவது ஏன்? என்றும் கேட்கின்றனர்.

உதயநிதியுடன் மீட்பு பணியில் இறங்கிய மாரி செல்வராஜ்

களத்துல உதவி செய்வதற்கு தான் யாருமே இல்ல, ஆனா வாய்கிழிய கோளாறு சொல்றதுக்கு ஓராயிரம் பேர் இருக்கிறார்கள். ஏற்கனவே மாரி செல்வராஜ் சாதி அடக்கு முறையை மாமன்னன் படத்தில் தோலுரித்துக் காட்டினார். அவருக்கு அடுத்த கதை கிடைச்சிருச்சு.

கனமழையால் தென் தமிழகத்தில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்பு கொள்ளவே முடியாத சூழல் நிலவுகிறது. அவர்களால் தண்ணீரிலிருந்து தப்பிக்க முடியும், இருப்பினும் அது எத்தனை நாள் என்று தான் தெரியவில்லை என சமீபத்திய பேட்டியில் குரல் நடுங்கியவாறு மாரி செல்வராஜ் பேசினார்.

மக்களின் இந்த அவல நிலையை அடுத்த படத்திலும் பேசி விடுவார் என்பதுதான் பலருடைய பயமாக இருக்கிறது. இருப்பினும் முன்பு சென்னையைப் போல் இப்போது தென் தமிழகம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதித்திருக்கிறது. அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு கொடுக்க வேண்டும், அவர்களை மீட்டு எப்படியாவது பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் இப்போது மாரி செல்வராஜின் ஒரே தவிப்பு.