அடங்கி போகாமல் திருப்பி அடித்த மாரி செல்வராஜ்.. கர்ணனுக்கும், மாமன்னனுக்கும் உள்ள ஒற்றுமை

Director Mari Selvaraj: துணை இயக்குனராய் களம் இறங்கி, அதன் பின் தன் படத்திற்கு கிடைத்த வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் பேசப்படும் இயக்குனர்களின் ஒருவர் தான் மாரி செல்வராஜ். இந்நிலையில் தன் கொள்கையை முன்வைத்து இவர் மேற்கொண்ட படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அவ்வாறு 2018ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பரியேறும் பெருமாள். இப்படத்தில் மேல் ஜாதியினர், கீழ் ஜாதியினர் இடையே ஏற்படுத்தும் பிரச்சனையை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டு இருக்கும். இருப்பினும் இப்படம் முரண்பாடான விமர்சனங்களை முன்வைத்தும், சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றார் மாரி செல்வராஜ்.

அதனைத் தொடர்ந்து 2021ல் இவர் மேற்கொண்ட கிராமத்து மக்களை தழுவிய படம் தான் கர்ணன். இப்படத்தில் தனுஷின் நடிப்பு சிறப்புற பேசப்பட்டிருக்கும். இரு கிராமத்தினர் இடையே ஏற்படும் அடிப்படை வசதிகளை பொருட்டு, உண்டாகும் பிரச்சனையை எதிர்கொள்ளும் விதமாக கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும்.

இப்படமும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்று தந்தது. அப்படத்தை தொடர்ந்து அதே சப்ஜெக்ட்டில் நகைச்சுவை நடிகரான வடிவேலு மற்றும் உதயநிதியை வைத்து முக்கிய கதாபாத்திரத்தில் உருவாக்கிய படம் தான் மாமன்னன்.

இப்படம் தற்பொழுது திரையில் வெளியாகி உள்ள நிலையில், தனுஷின் கர்ணன் படம் போல இப்படமும் ஆதித்த ஜாதியினரை எதிர்த்து நிற்கும் சம்பவத்தை வெளிக்காட்டி உள்ளது. ஆனால் இவரின் முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தில் ஆதித்த ஜாதியினரால் அடக்க முறையை எதிர்கொள்வது போல காட்டியிருப்பார்.

ஒரே கதையை பல பாணியில் மாறுபட்ட திருப்புமுனைகளோடு படங்களை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ் என விமர்சனங்கள் இவர் மீது முன் வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இவர் மேற்கொண்ட மாமன்னன் படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.