Udhayanidhi-Mari Selvaraj: ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்து வந்த மாமன்னன் தற்போது பெரும் விவாதத்திற்கு ஆளாகி இருக்கிறது. அதிலும் மாமன்னனாக நடித்த வடிவேலுவின் கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலுடன் ஒத்து போன தகவல் தான் இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது.
பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் பல அவமானங்களை தாண்டி தான் சபாநாயகர் என்ற அந்தஸ்தை அடைந்திருக்கிறார். அதையே தான் மாரி செல்வராஜ் வடிவேலு மூலம் மாமன்னன் படத்திலும் தெளிவுபடுத்தி இருந்தார். அதேபோன்று பிறப்பால் எல்லோரும் சமம் தான் என்ற கருத்தையும் விதைத்திருந்தார்.
ஆனால் இந்த கருத்தை அவர் உதயநிதி மூலம் வெளிப்படுத்தியிருந்தது தான் அவருடைய சாமர்த்தியம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் முன்னாள் சபாநாயகரான தனபால் பதவியில் இருக்கும்போது எதிர்க்கட்சியினரால் அவமானத்திற்கு ஆளானார்.
அதாவது சட்டசபையிலேயே அவருக்கு மரியாதை இல்லாமல் திமுக கட்சியினர் நடந்து கொண்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவரை பிடித்து தள்ளுவது போன்ற சில வீடியோ காட்சிகளும் கண்டனத்திற்கு ஆளானது. அந்த வீடியோவை இப்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வரும் ரசிகர்கள் தங்கள் தரப்பு வாதத்தையும் முன்வைக்கின்றனர்.
இதன் மூலம் மாரி செல்வராஜ் தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் என பாராட்டுகின்றனர். மேலும் இந்த விஷயத்தை உதயநிதி மூலமாக சொல்வதன் மூலம் அவர் விரலை வைத்து அவர் கண்ணையே குத்தும்படியாக செய்திருக்கிறார். அது மட்டும் இன்றி படத்தில் ஆதிக்க வர்க்கம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் தெளிவாக காட்டி இருக்கிறார்.
அப்படி ஒரு இடத்தில் இருந்து வரும் வடிவேலு அடையும் உயரமும் முன்னாள் சபாநாயகரை நினைவு கொள்ள வைக்கிறது. அந்த வகையில் பலரும் மறந்து போயிருந்த சம்பவத்தை மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் வாயிலாக பரபரப்பாக்கி அம்பை வேறு பக்கம் திருப்பி விட்டுள்ளார்.