Mari Selvaraj : மாரி செல்வராஜ் மாமன்னன் படத்திற்குப் பிறகு வாழை என்ற எதார்த்தமான படத்தை கொடுத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு துருவ் விக்ரம் படத்தை எடுத்து வருகிறார்.
பைசன் காளமாடன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. ஏனென்றால் துருவ் விக்ரம் பல வருடங்களாக இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
அதற்கான பலன் நிச்சயமாக கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். இந்த படம் மே மாதம் திரைக்கு வருகிறது. உடனடியாகவே மாரி செல்வராஜ் அடுத்த படத்தை இயக்க உள்ளாராம். அவரது லைனில் கார்த்தி, தனுஷ் மற்றும் விக்ரம் ஆகியோர் இருக்கின்றனர்.
மாரி செல்வராஜின் அடுத்த ஹீரோ
ஆனால் கார்த்தி இப்போது சர்தார் 2, கைதி 2 என பல படங்களில் பிசியாக இருக்கிறார். அதேபோல் தான் தனுஷும், அவர் கால்ஷுட் கொடுத்த படங்களே எக்கச்சக்கமாக இருக்கிறது. மேலும் விக்ரம் வீரதீர சூரன் படத்திற்கு பிறகு மடோன் அஸ்வின் படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு வரிசையில் உள்ள டாப் நடிகர்கள் எல்லோருமே பிசியாக இருக்கிறார்கள். அவர்களின் கால்ஷீட் கொடுப்பதற்குள் வாழை போன்ற மற்றொரு ப்ராஜெக்ட் மாரி செல்வராஜிடம் இருக்கிறதாம்.
மிகக் குறுகிய காலத்தில் அந்த படத்தை எடுத்துவிட்டு அதன் பிறகு இவர்களில் ஒருவரின் படத்தை எடுக்க உள்ளார். அந்தப் படமும் வாழை படத்தைப் போல எதார்த்தமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.