Director Naga: இயக்குனரின் கதையை நம்பி களம் இறங்கும் தயாரிப்பாளர்களுக்கு படம் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களால் சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு மர்ம தேச பிரபலத்தை நம்பி விழி பிதுங்கும் நிலைமைக்கு ஆளானார் தயாரிப்பாளர் ஒருவர்.
பிரபல அபிராமி தியேட்டரின் உரிமையாளர் தான் அபிராமி ராமநாதன். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம் பெற்ற அபிராமி தொடர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆவார். அதன்பின் வெப் சீரியஸ் ஒன்றை தயார் செய்து வரும் இவர் மர்ம தேச புகழ் நாகாவின் நண்பர் ஆவார்.
மர்மம் நிறைந்த மற்றும் திரில்லர் சார்ந்த சீரியலுக்கு புகழ் பெற்றவர் இயக்குனர் நாகா. இவரின் படைப்பில் மர்ம தேசம், சிதம்பர ரகசியம், அது மட்டும் ரகசியம், ரமணி vs ரமணி போன்ற தொடர்கள் மூலம் மிகவும் பிரபலமானவர். மேலும் ஆனந்தபுரத்து வீடு என்னும் படத்தின் இயக்குனர் ஆவார்.
அதைத்தொடர்ந்து அபிராமி ராமநாதனின் வெப் சீரியஸில் மர்மமான கதை கொண்ட வெப் சீரியலை உருவாக்க கும்பகோணம் சுற்றியுள்ள பகுதிகளில் கோயில்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென்று நாகாவிற்கு நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். அதனால் படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன்பின் அவரின் அசோசியேட்டை வைத்து இந்த சீரியலை முடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார் தயாரிப்பாளர். அதற்கு இயக்குனர் சற்றும் ஒத்துப்போகவில்லையாம். இது தனது 20 வருட கனவு கதை என்பதால் என்னால் மட்டுமே இந்த சீரியலை இயக்க முடியும் என கூறு நிறுத்தி உள்ளார்.
இவற்றால் ஏற்படும் நஷ்டத்தையும் கொஞ்சம் கூட பொறுப்பெடுத்தாமல் நான் மட்டும் தான் இந்த சீரியலை இயக்குவேன் என்று அடம்பிடித்து, சண்டை போட்டு வருகிறார் நாகா. ஒரு நாளைக்கு மூன்று சிகரெட் பாக்கெட்டை அடித்து பிரச்சனையை உண்டுபடுத்திக் கொண்டு, தற்பொழுது சீரியலுக்கும் முட்டுக்கட்டை போட்டு வருவது தயாரிப்பாளரை விழி பிதுங்க வைத்து வருகிறது.