அஜித்துடன் இணையும் மாஸ் இயக்குனர்.. அனல் பறக்க போகும் ஏகே65

Actor Ajith : விடாமுயற்சி படம் எப்போது ரிலீஸாகும் என்று அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்குள்ளாகவே அடுத்த மூன்று படங்களின் இயக்குனரை அஜித் லாக் செய்து வைத்திருக்கிறார்.

அதாவது ஏகே62 படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பது உறுதியான ஒன்று தான். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. அடுத்ததாக அஜித் வெற்றிமாறனுடன் கூட்டணி போட இருக்கிறார். இவர்களது காம்போ கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என்று பேசப்படுகிறது.

இந்த சூழலில் ஏகே 65 படத்தின் இயக்குனர் யார் என்பது தெரிந்துள்ளது. அதாவது கேஜிஎஃப் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிரசாத் நீல் தான் அஜித்துடன் கூட்டணி போட இருக்கிறார். இவர் பிரபாஸின் சலார் படத்தை இயக்கிய நிலையில் அஜித்துக்காக இப்போது ஒரு கதை சொல்லி இருக்கிறாராம்.

வித்தியாசமான கதையாக இருக்கும் நிலையில் முதல்கட்ட பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. அடுத்தடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் படம் உறுதி ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. அஜித்தின் துணிவு படத்திற்குப் பிறகு விடாமுயற்சி படத்தை தொடங்குவதில் ஏகப்பட்ட சிக்கல் இருந்தது.

இதைதொடர்ந்து இப்போது தான் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் விடாமுயற்சியை தொடர்ந்து இதே சூட்டுடன் அஜித் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் வருவதுடன் சீக்கிரமாக படப்பிடிப்பையும் தொடங்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். மேலும் பிரசாந்த் நீல், அஜித் கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக வாய்ப்பிருக்கிறது.