குட்டி பவானி எல்லாம் சும்மாதான்.. அதைவிட 10 மடங்கு பவர்ஃபுல்லான கேரக்டரை கையில் எடுத்த மகேந்திரன்

Master Mahendran Next Movie: மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே மிச்சம் இருப்பதால், சீக்கிரம் படத்தை முடித்து வரும் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய காத்திருக்கின்றனர்.  இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக மிரட்டி விட்ட மாஸ்டர் மகேந்திரன், அந்த கதாபாத்திரத்தை விட பத்து மடங்கு பவர்ஃபுல்லான கேரக்டரை கையில் எடுத்திருக்கிறார்.

இதற்காக அவர் தன்னுடைய தோற்றத்திலும் வித்தியாசமாக காட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். அதிலும் சமீபத்தில் பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் மகேந்திரன் தன்னுடைய முகத்தில் பெரிய மாஸ்க் ஒன்றை அணிந்து கொண்டு, அதை கடைசிவரை கழட்ட மறுத்துவிட்டார்.

இது லியோ படத்திற்கான கெட்டப்பா? என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். ஆனால் அதை மறுத்துவிட்ட மாஸ்டர் மகேந்திரன், ஒரு பக்கம் லியோ படம் எல்யூசி படம் என்பதால் அதில் தனக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் லோகேஷ் கடைசி வரை மகேந்திரனை அழைக்கவில்லை.

இருப்பினும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ஏகப்பட்ட வெற்றி தோல்விகளை சந்தித்த மாஸ்டர் மகேந்திரன், அதை பெரிதாக பொருட்படுத்தாமல் அதைவிட பத்து மடங்கு பவர்ஃபுல்லாக இருக்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

இவர் அடுத்ததாக கனா, நெஞ்சுக்கு நீதி பட இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘லேபிள்’ என்ற வெப் தொடரில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கும் லேபிள் வெப் சீரிஸ் மாஸ்டர் படத்தை விட பத்து மடங்கு பயங்கரமாக இருக்கும் என்றும் அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

என்ன தான் தனக்கு லியோ படத்தில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அந்த படத்திற்கே டஃப் கொடுக்கும் வகையில் லேபிள் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிக்காட்ட வேண்டும் என மாஸ்டர் மகேந்திரன் ஒரு வெறியுடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்.