விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். கடந்த 8 நாட்களில் சுமார் 200 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
முதலில் அமேசான் அல்லது நெட்ப்ளிக்ஸ் போன்ற இணைய தளத்தில் தான் படம் வெளியாகும் என பலரும் சூடம் ஏற்றி சத்தியம் செய்த நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என நேரடியாக திரையரங்குகளில் வெளியிட்டு பெரிய லாபம் பார்த்து விட்டது படக்குழு.
தயாரிப்பாளர் மற்றும் லாபம் பார்த்தால் போதுமா, எங்களுக்கு எதுவும் வேண்டாமா எனும் அளவுக்கு தற்போது சன் டிவி மாஸ்டர் படத்தை ஒளிபரப்பி கல்லா கட்டும் வேலையில் இறங்கியுள்ளனர். இதனால் மாஸ்டர் படம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாளையும் குறித்து விட்டார்களாம்.
இன்னும் சில தினங்களில் மாஸ்டர் படம் அமேசான் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவி தன்னுடைய பிரைம் நேரத்தில் மாஸ்டர் படத்தை வெளியிட உள்ளார்களாம்.

இந்த முறை டிஆர்பி பந்தயத்தில் முதலிடத்தை மீண்டும் பிடித்து விட வேண்டும் என தளபதி ரசிகர்கள் மிகவும் உக்கிரமாக இருக்கிறார்களாம். இதுவரை கடந்த சில வருடங்களில் வெளியான படங்களில் விஜய்யின் சர்கார் படம் மட்டுமே ஒரே நாளில் அதிகம் பேர் பார்த்த படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சர்கார் படத்தை மிஞ்சி விட வேண்டும் என தளபதி ரசிகர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றி வருகிறார்களாம். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படம் சர்கார் படத்தை தோற்கடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் புலிகுத்தி பாண்டி படத்தை விட கம்மியான டி ஆர் பி பெற்றதே அனைவருக்கும் அதிர்ச்சி தான்.