அமேசானில் வெளியாகியும் தியேட்டரில் மாஸ் காட்டும் மாஸ்டர்.. தமிழ்நாட்டின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. ஆனால் படம் வெளியாகி 15 நாட்களிலேயே அமேசான் தளத்தில் நேரடியாக வெளியிட்டனர்.

திரையரங்கு உரிமையாளர்கள் மாஸ்டர் படத்தை வைத்து நன்றாக கல்லா கட்டிவிட்டு பின்னர் தயாரிப்பாளரை ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் விஜய் தரப்பு மிகவும் அப்செட்டாக இருந்தார்களாம். அதனாலேயே அமேசானுக்கு கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமேசான் தளத்தில் வெளியான பிறகும் நேற்று தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை என அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் தங்களது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

ஒரே நேரத்தில் ஓடிடி தளத்திலும் திரையரங்குகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒரே திரைப்படம் என்றால் அது மாஸ்டர் தான் என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் மாஸ்டர் வசூல் அமோகமாக இருக்கிறதாம்.

சமீபத்தில்தான் மத்திய அரசு 100% பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாஸ்டர் படம் வெளியாகும்போது 50 சதவீத பார்வையாளர்கள் தான். பெரும்பாலும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டும்தான் இந்த முறை கடைபிடிக்கப்பட்டது.

கிராமப்புறங்களிலும் சிங்கிள் தியேட்டர்களிலும் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் தற்போது வரை மாஸ்டர் திரைப்படம் 125 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வளவு கஷ்டத்திலும் மாஸ்டர் படம் இவ்வளவு பெரிய வசூல் செய்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.