மறைமுகமாக மாதம்பட்டி ரங்கராஜ் ஃபண்டிங் பண்ணிய 3 படங்கள்.. மொத்த மரியாதையையும் இழந்த சீஃப் குக்

ஏற்கனவே திருமணமான மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்டார். காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வரும் ஜாய் கிறிஸ்டிலாவை கடந்த வாரம் கல்யாணம் பண்ணினார். இவரின் முதல் மனைவி பெயர் சுருதி அவரை விவாகரத்து செய்யாமல் இந்த திருமணம் நடைபெற்றதாக ஒரு பேச்சு.

ஒரு செலிபிரிட்டியாக, நல்லதொரு சமையல் கலைஞர் என நற்பெயர் வாங்கி வந்த மாதம்பட்டி ரங்கராஜ் இப்படி செய்துவிட்டார் என அனைவரும் கரித்து கொட்டும் அளவிற்கு இப்பொழுது அவர் மானம் காற்றில் பறந்து வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட ஆடம்பர கார்களை வைத்திருக்கும் இவர் கோடிகளில் சம்பாதிக்கிறார். அப்படி அவர் சினிமாவிற்கு ஃபண்டிங் பன்னிய 3 படங்கள்.

மெஹந்தி சர்க்கஸ்: இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தாலும் அவருக்கு மறைமுகமாக ஃபண்டிங் செய்தது மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்கிறார்கள். 2019ஆம் ஆண்டு டைரக்டர் ராஜூ முருகன் இதை இயக்கினார். இதில் மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடித்திருந்தார்.

மிஸ் மேகி: இந்த படத்தில் யோகி பாபு உடன் இணைந்து நடித்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். ஆனால் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த ஆண்டு இந்த படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கும் இவர்தான் மறைமுகமாக காசுகளை இறக்கி இருக்கிறார்.

மீண்டும் ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜு முருகன் இவரை வைத்து ஒரு படத்தை திட்டமிட்டு கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கும் வழக்கம் போல் இவர்தான் தயாரிப்பாளர். அதுபோக இன்னும் இரண்டு படங்கள் நடிப்பதாக இருக்கிறார். அதில் ஒரு படம் இயக்குனர் சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.