OTT Movies : இந்த வாரம் தியேட்டரில் கிட்டத்தட்ட பத்து படங்கள் வெளியாகிறது. அதே போல் ஓடிடியிலும் நிறைய புதுவரவுகள் வந்துள்ளது. அவை என்னென்ன படங்கள் என்பதை இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவான கேங்கர்ஸ் படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. ஓரளவு நல்ல வசூலை பெற்ற இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மே 15 ஸ்ட்ரீமாகிறது.
அடுத்ததாக விக்னேஷ் ரவி, டி எஸ் கே மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ளது கமு கபி. இந்தப் படம் மே 16ஆம் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அடுத்ததாக ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான படம் தான் நேசிப்பாயா.
இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் படங்கள்
இந்த படம் ஐந்து மாதங்கள் கழித்து நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. மேலும் இதே நாளில் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் பாவனா மேனன் நடிப்பில் உருவான தி டோர் படம் வெளியாகிறது.
பிரபுதேவா, மடோனா செபஸ்டின், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவான படம் ஜாலியோ ஜிம்கானா. இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் 15ஆம் தேதி வெளியாகிறது. மலையாளத்தில் மரண மாஸ் என்ற படம் சோனி லைவ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் untold the liver king, paddington in Peru, I am still here, Franklin, Bet, bad thoughts ஆகிய படங்கள் வெளியாகிறது. ஆகையால் இந்த விடுமுறைக்கு எக்கச்சக்க படங்கள் வந்து குவிகிறது.