மே 16 வெளியாகும் மூன்று படங்கள்.. போட்டி போட்டுக் கொள்ளும் சந்தானம், சூரி

Santhanam : சந்தானம் மற்றும் சூரி இருவருமே காமெடி நடிகராக சினிமாவில் நுழைந்தவர்கள். அதன் பிறகு அடுத்த அடுத்த கட்டத்திற்கு சென்று இப்போது கதாநாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் படம் வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் தொடர்ச்சியான டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் மே 16ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

விடுதலை, கருடன், கொட்டுகாளி ஆகிய படங்கள் நல்ல வரவைப்பை பெற்றது. இப்போது மாமன் என்ற குடும்ப செண்டிமெண்ட் கதையில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது.

மே 16 தியேட்டரில் வெளியாகும் மூன்று படங்கள்

இந்த படமும் மே 16 வெளியாக உள்ள நிலையில் காமெடி நடிகர்களாக இருந்து ஹீரோ அவதாரம் எடுத்த சந்தானம் மற்றும் சூரி போட்டி போட இருக்கின்றனர். மேலும் யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க படமும் மே 16 வெளியாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் சசிகுமாரின் நா நா படமும் அன்று வெளியாகிறது.

இந்த படத்தில் சசிகுமாருக்கு இணையாக சரத்குமாரும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியானது. ஒட்டுமொத்த குடும்ப ஆடியன்சை கவரும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் வசூல் மலையில் நனைந்து வருகிறது. சூர்யாவின் ரெட்ரோ படத்தின் வசூலை பாதிக்கும் அளவுக்கு டூரிஸ்ட் ஃபேமிலி தியேட்டரில் சக்கை போடு போட்டு வருகிறது.