Vijay Sethupathi : கடந்த வாரம் தியேட்டரில் சூரியன் மாமன் படத்திற்கு போட்டியாக சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியானது. இதில் மாமன் படம் வசூல் மழையில் நனைந்து வருகிறது. குடும்ப சென்டிமென்ட் ஆக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
மேலும் இதற்கு முந்தைய வாரம் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் வசூல் வேட்டையில் இருந்து வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் இந்த படங்களின் வசூலை பாதிக்கும் வகையில் இந்த வாரம் தியேட்டரில் மூன்று படங்கள் வெளியாகிறது.
விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் Ace படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலரில் பல சஸ்பென்சுகள் இருந்த நிலையில் படத்தை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.
மே 23 வெளியாகும் மூன்று படங்கள்
விஜய் சேதுபதியின் படத்திற்கு போட்டியாக இரண்டு படங்கள் வெளியாகிறது. ஹரி கிருஷ்ணன், ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி இருக்கிறது வேம்பு படம். ஷீலா எப்போதுமே துணிச்சலான கதையை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.
அவ்வாறு வேம்பு படத்திலும் தற்காப்புப் கலை கற்று அச்சமே இல்லாத ஒரு கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார். அடுத்ததாக மையல் படம் மே 23 வெளியாகிறது. சேது மைனா, சம்ரித்தி தாரா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பி ஜெயமோகன் கதையில் உருவாகி இருக்கும் மையல் படம் கிராமத்தில் ஒரு காதல் எவ்வாறு பயணிக்கிறது என்பதை அழகாக சொல்லி உள்ளது. ஆகையால் இந்த வாரம் வெளியாகும் மூன்று படங்களில் வெற்றியை எந்த படம் பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.