This Week OTT Movies : கடந்த வாரம் ஓடிடியில் தமிழ் படங்கள் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெளியாகவில்லை. அதேபோல் இந்த வாரம் தியேட்டரில் கிட்டத்தட்ட 10 படங்கள் வெளியானாலும் பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் அதில் இடம் பெறவில்லை.
ஆகையால் ஓடிடியிலாவது நல்ல படங்கள் வெளியாகிறதா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் குட் பேட் அக்லி படம் வருகின்ற மார்ச் 8 ஆம் தேதி நெட்பளிக்ஸில் வெளியாகிறது.
தியேட்டரில் இந்த படம் 25 நாட்களில் 300 கோடியை தாண்டி வசூல் செய்தது. அடுத்ததாக நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் மே எட்டாம் தேதி
Forever, Heart Eyes ஆகிய ஆங்கில படங்கள் வெளியாகிறது. மே ஐந்தாம் தேதி Inside Man, Britain And The Blitz போன்ற படங்களும் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
மே இரண்டாவது வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
கொரியன் மொழியில் உருவான TheMatch, பிரெஞ்சு மொழியில் உருவான LastBullet படங்கள் மே 7ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
தெலுங்கில் ஜி5 ஓடிடி தளத்தில் Robin hood, ETvWin ஓடிடி தளத்தில் Akkada Ammayi ikkada Abbayi படங்கள் ஸ்ட்ரீமாகிறது.
இவ்வாறு தமிழில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் மட்டும் தான் வெளியாகிறது. ஆனால் ஹாலிவுட்டில் பல படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் இந்த விடுமுறையை ஓடிடியில் படங்களை பார்த்து நேரத்தை செலவிடலாம்.