மீனாவுக்கே டப் கொடுக்கும் மகள் நைனிகா.. வைரலாகும் வருங்கால நடிகையின் புகைப்படம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதன் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முத்து படத்தில் நடித்திருந்தார். அதன்பின்பு 24 வருடங்களுக்கு பிறகு அண்ணாத்த படத்தில் மீண்டும் ரஜினியுடன் நடித்துள்ளார்.

இவர் 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. மீனாவை போலவே நைனிக்கவும் குழந்தை நட்சத்திரமாக படங்களில் அறிமுகமாகியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் நைனிகா அறிமுகமானார். இப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய ஹிட்டானது.

தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மீனா அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் மீனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகள் நைனிகாவுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

nainika
nainika

அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் அம்மா, மகள் மாதிரி இல்ல சகோதரிகள் போல் உள்ளார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்தவகையில், மீனாவை போலவே நைனிக்காவும் முன்னணி நடிகையாக வலம் வர அதிகம் வாய்ப்புள்ளது.