1. Home
  2. கோலிவுட்

இமேஜை பொருட்படுத்தாமல் மீனா செய்த காரியம்.. நடுரோட்டில் அரங்கேறிய சம்பவம்

இமேஜை பொருட்படுத்தாமல் மீனா செய்த காரியம்.. நடுரோட்டில் அரங்கேறிய சம்பவம்
இப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று பேர் சொல்லும் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Meena: தன் அழகாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொண்ட கதாநாயகி தான் மீனா. இன்றும் இளமை குறையாமல் அதே சிரிப்புடன் மயக்கி வரும் இவர் படப்பிடிப்பின் போது துணிந்து செய்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

90ஸ் காலகட்டத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா. தன் கண்ணழகால் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். ஆரம்ப காலத்திலேயே பிரபலங்களோடு மேற்கொண்ட பல படங்கள் இவருக்கு வெற்றி கொடுத்தது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தற்பொழுது 40 வருட கால சினிமா பயணத்தை விழாவாக கொண்டாடி வருகிறார். இதை தொடர்ந்து பல பிரபலங்களின் பாராட்டுகளையும், ஆசிகளையும் பெற்று வரும் இவரை குறித்து வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1991ல் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரிப்பில் உருவான படம் தான் என் ராசாவின் மனசிலே. இப்படத்தில் மீனா, வடிவேலு, ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜ்கிரண் மீனா குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அவர் கூறுகையில் இப்படத்தில் நடிக்கும் பொழுது மீனாவிற்கு 15 வயதுதான் இருக்கும். இருப்பினும் இவர் பெரிய கதாபாத்திரத்தை ஏற்று தத்ரூபமாக நடித்திருப்பார். மேலும் இப்படத்தின் பாடல் காட்சி படப்பிடிக்கும் பொழுது, மீனா ஆடை மாற்ற வேண்டியதாக இருந்தது.

அப்பொழுது அங்கு கேரவன் இல்லாததால் தன்னால் படப்பிடிப்பு தாமதமாக கூடாது என்பதற்காக மீனா வந்த காரை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு கார் மறைவில் ஆடையை மாற்றினார் என ராஜ்கிரண் தெரிவித்தார். இத்தகைய சம்பவம் இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று பேர் சொல்லும் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.