மனதளவில் சித்திரவதை செய்யப்பட்ட சமந்தா.. ஆண் நண்பர் கூறிய ரகசியத்தால் ஆடிப்போன நாக சைதன்யா

சினிமாவில் ஒன்றாக இணைந்து நடித்த சமந்தா, நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது விவாகரத்து செய்து பிரிந்திருக்கும் இந்த ஜோடி பற்றி அவ்வப்போது பல சர்ச்சையான செய்திகள் வெளி வருவதுண்டு. ஆனால் அதைப்பற்றி இருவருமே பெரிய அளவில் விளக்கம் கொடுக்காமல் இருப்பார்கள்.

அந்த வகையில் தற்போது நாக சைதன்யாவால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை பற்றி வெளிவந்துள்ள ஒரு தகவல் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. அதாவது சமந்தாவின் நண்பரான ப்ரீதம் என்பவர் தற்போது பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் ஆண்கள் தங்களுடைய உண்மையான குணத்தை மறைக்கக் கூடியவர்கள்.

அதனால் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், அடக்குமுறைகளும் அதிகமாகிறது. இதற்கு அவர்கள் மட்டும்தான் முழு காரணம். வன்முறை என்பது உடலளவில் காயப்படுத்துவது அல்ல மனதளவில் சித்திரவதை செய்வது, விமர்சனம் செய்வது போன்றவை தான் என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த மறைமுகமான கருத்து நாக சைதன்யாவை பற்றியும் அவருடைய குடும்பத்தினரை பற்றியும் தாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இதற்கு முன்பே சமந்தா தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட சமயத்தில் இது போன்ற கருத்துக்கள் வெளியாகி இருந்தது. அதாவது சமந்தா சினிமாவில் அதிகப்படியான கவர்ச்சி காட்டி நடிப்பது தான் அவர் குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பி இருக்கிறது என்று ஊடகங்களில் பல செய்திகள் வெளிவந்தது.

அது மட்டுமல்லாமல் அவர் குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பதாகவும், இதனால் நாக சைதன்யாவுக்கும் அவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்த விஷயத்தில் சமந்தாவின் மாமனார் வீட்டில் இருந்தும் பல விமர்சனங்கள் வந்திருக்கிறது. குடும்ப பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களில் சமந்தா கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

இதையெல்லாம் தாங்க முடியாமல் தான் ஒரு கட்டத்தில் அவர் வெறுத்து போய் இந்த விவாகரத்து முடிவை எடுத்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருந்தனர். இதை சமந்தா கூட சில ட்வீட் மூலம் மறைமுகமாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் வெளிவந்துள்ள இந்த கருத்து நாக சைதன்யாவை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மேலும் இப்படி எல்லாம் சமந்தா மனதளவில் சித்திரவதை செய்யப்பட்டாரா என்று ரசிகர்கள் இப்போது வருத்தப்பட்டு வருகின்றனர்.