Messai Rajendran apologized to Vijay for his speech: மீசை ராஜேந்திரன் இளைய தளபதி விஜய்யை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து அவரது ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்ற வழக்கத்தை கொண்டிருக்கிறார். தோசை கல்லில் தோசையை திருப்பி போடுற மாதிரி அலேக்கா விஜய் பற்றி மாத்தி மாத்தி அறிக்கை விட்டு வருகிறார் மீசை ராஜேந்திரன்.
சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சையின் போது வெளியானது விஜய்யின் லியோ. அப்போது மீசை ராஜேந்திரன் அவர்கள் ஜெயிலரின் வெற்றியை வசூலை லியோ முந்தாது அப்படி முந்தினால் விஜய் வாயால் சொல்லட்டும் நான் மீசையை எடுத்துக்கிறேன் என்று அதிரடியாக அறிவித்தார்.
லியோ நல்ல வசூலை பெற்ற நிலையில் ஜெயலரை மட்டும் கையில் எடுக்காமல் கூடவே 2.0 வசூலையும் கோடிட்டு காட்டி விஜய்யை வம்பு இழுத்தார். பின் வசூலில் சாதித்தாலும் ரஜினி கூட விஜய்யை ஒப்பிட முடியாது என்று சுரண்டி பார்த்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக நடிகரும் தேமுதிகவின் நிர்வாகியுமான விஜயகாந்த் அவர்கள் திடீரென காலமானார். அவரது இறுதி அஞ்சலிக்கு சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இளைய தளபதி விஜய் அவர்கள் விஜயகாந்த் இறந்த அன்று இரவில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு போனார். அவர் போகும்போது தேவையற்ற கோஷங்களும் செயல்களும் நடந்தது வேறு கதை. இதனை இருதரப்பு ரசிகர்களும் கண்டித்தனர்.
விஜயகாந்தின் விசுவாசியான மீசை ராஜேந்திரன் அவர்கள் விஜய்யை பற்றி “இப்போம் வருகிறவர் பலகாலம் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத போது ஏன் வரவில்லை?” என்று பிரேமலதாவிடம் கொளுத்தி போட்டார். அவர்களும் விஜய்யை பற்றி பேச வேண்டாம் என்று கண்டுக்காமல் விட்டனர்.
தற்போது மீசை ராஜேந்திரன் அவர்கள் விஜய் குறித்த சர்ச்சை பேச்சிற்கு கேப்டன் அந்த இடத்துல இருந்தா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாரு. கேப்டன் இருந்திருந்தால் கூட இதை அனுமதித்திருக்க மாட்டார் எனவும் தான் பேசியதிற்கு மன்னிப்பு கேட்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். முன்யோசனை இன்றி வாய்க்கு வந்ததை உளறும் மீசை ராஜேந்திரன் மீது ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.