Metti Oli Bose Venkat: சின்னத்திரையில் ஒரு சகாப்தம் என்றால் அது மெட்டி ஒலி தொடர் தான். இதில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கட். இந்த படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய வெளிச்சம் கிடைத்ததால் பெயரை போஸ் வெங்கட் என்று மாற்றிக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் போஸ் வெங்கட்டுக்கு வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலான படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து வந்தார். அதுவும் இவருக்கு டாப் நடிகர்களின் படங்களில் தான் தொடர்ந்து வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
நடிகராக கலக்கிக் கொண்டிருந்த போஸ் வெங்கட் இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே ஒரு படம் இயக்கி நடுநிலையான வெற்றி பெற்ற நிலையில் இப்போது முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்து வருகிறாராம்.
இவ்வாறு போஸ் வெங்கட் சினிமாவில் வளர்ச்சி அடைந்து வரும் நேரத்தில் அவரது குடும்பத்தில் மீள முடியாத துயர் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது நேற்று போஸ் வெங்கட் உடைய சகோதரி வளர்மதி எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளார். இதற்காக இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது.
அந்தச் சமயத்தில் இவரின் மூத்த சகோதரர் ரங்கநாதன் என்பவர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற போது உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவம் அங்கு உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நாளில் இவ்வாறு போஸ் வெங்கட் தனது உடன்பிறப்புகளை இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்ணன், அக்கா என இரண்டு ரத்த சொந்தங்களையும் இழந்து வாடும் போஸ் வெங்கட்டுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த மீளா துயரிலிருந்து அவர் மீண்டு வர கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும். ஆகையால் அதையும் கடந்து மீண்டும் பழைய புத்துணர்ச்சியுடன் போஸ் வெங்கட் வரவேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.