எம்ஜிஆருக்கு பிடிக்காத நடிகர்.. உயிருக்கு பயந்து கலைஞரிடம் அடைக்கலம் சென்றார்!

Actor M.G.R: தன்னுடைய திறமையால் தமிழ் சினிமாவில் மாபெரும் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் எம்ஜிஆர். இவரின் இடத்திற்கு இடையூறாய் இருந்த நடிகர், மேற்கொண்ட பிரச்சனைகளை பற்றி சில தகவல்களை இங்கு காணலாம்.

அரசியலிலும், சினிமாவிலும் தன் ராஜ்யத்தை நிலை நிறுத்தியவர் எம்ஜிஆர். மக்களிடையே புரட்சித்தலைவர் என்று அழைக்கப்பட்ட இவர் நடித்த படங்கள் தொடர் வெற்றியை சந்தித்தது. இவரின் எதார்த்தமான நடிப்பிற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது.

அவ்வாறு இவர் நடித்த படங்களில் மூலம் ஈர்க்கப்பட்ட பெண் ரசிகைகள் ஏராளம். இந்நிலையில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சிவாஜி மற்றும் எம்ஜிஆரின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு போட்டியாக களம் இறங்கியவர் தான் ஜெய்சங்கர்.

தன்னுடைய தோற்றத்தாலும், நடிப்பாலும் பல படங்களில் நடித்து பெண் ரசிகைகளில் எதிர்பார்ப்பை பெற்றவர். இது போன்ற காரணத்தாலும், மேலும் தொடர்ந்து இவர் ஜெயலலிதாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு பெற்றதாலும் இவரை போட்டியாக நினைத்தார் எம்ஜிஆர்.

மேலும் ஜெயலலிதாவும் இதைப் பற்றி கவலைப்படாமல் ஜெய்சங்கர் உடன் தொடர்ந்து நடித்ததால், எம்ஜிஆர் இடமிருந்து பல பிரச்சனைகளை சந்தித்தார். ஒரு காலகட்டத்தில் இதுவே இவரின் உயிருக்கு ஆபத்தாகவும் அமைந்தது.

அவ்வாறு எம்ஜிஆருக்கு பிடிக்கவே பிடிக்காத ஹீரோவாக மாறினார் ஜெய்சங்கர். ஆகையால் தன் உயிருக்கு இனி உத்திரவாதம் இல்லை என்பதனால் திமுகவை சேர்ந்த கலைஞருடன் தஞ்சம் அடைந்தார். இது போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லாவிட்டால் இவர் எம்ஜிஆர்க்கு நிகராக மாபெரும் ஹீரோவாக தமிழ் சினிமாவில் கொடியேற்றி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.