மண்டபத்திற்காக பெரிய கையுடன் மோதிய ரஜினி.. எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா?

பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்களுக்கு மார்க்கெட் உள்ள போது நிறைய படங்களில் நடித்து சொத்துக்களை சேர்த்து வைக்க எண்ணுவார்கள். அப்படி ரஜினி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது ராகவேந்திரா என்ற திருமண மண்டபத்தை கட்டியிருந்தார். தற்போது வரை அந்த மண்டபம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த மண்டபத்தை சாதாரணமாக ரஜினி பெறவில்லை. பல பிரச்சனைகளைத் தாண்டி தான் ராகவேந்திரா திருமண மண்டபம் ரஜினியின் கைவசம் சென்றுள்ளது. ஆரம்பத்தில் இந்த மண்டபத்திற்காக மிகப்பெரிய பதவியில் உள்ளவர்களும் கைப்பற்ற நினைத்துள்ளனர். அப்போது எந்த பயமும் இன்றி பெரிய கைகளுடன் ரஜினி மோதி உள்ளார்.

இதை யாருக்கு கொடுப்பது என்று அப்போது ஆலோசனை நடந்துள்ளது. ஏனென்றால் அரசியல் பிரபலங்களும் இதற்கு போட்டியாக இருந்தனர். ஆனால் அந்தச் சமயத்தில் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் ரஜினிக்கு தான் இந்த மண்டபத்தை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன் பின்பு தான் ரஜினியின் சொந்தமானது ராகவேந்திரா மண்டபம். அதுமட்டும்இன்றி இதை பலமுறை ரஜினி மேடைகளில் பேசி உள்ளார். எம்ஜிஆர் இரண்டு விஷயங்களில் நான் கேட்காமலே உதவி உள்ளார் என்று ரஜினி கூறியிருந்தார். அதாவது ஆரம்பத்தில் லதா மற்றும் ரஜினிகாந்த் திருமணத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

அப்போது லதா வீட்டிற்கு சென்று எம்ஜிஆர் தான் கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கி கொடுத்துள்ளார். எனது திருமணத்தில் மட்டுமல்லாமல் திருமண மண்டபத்திற்கும் உதவியது எம்ஜிஆர் தான். அதாவது ராகவேந்திரா மண்டபம் கிடைக்க பல போட்டிகள் இருந்தது. ரஜினிக்கு கொடுத்தால் கண்டிப்பாக ஏழைகளுக்கு உதவுவார்.

அங்கு நிறைய ஏழை, எளிய மக்களின் திருமணம் நடைபெறும். ஆகையால் ரஜினிக்கு மண்டபத்தை கொடுக்குமாறு எம்ஜிஆர் கூறியிருந்தார். இவ்வாறு சூப்பர் ஸ்டாருக்கு எப்போது பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக வந்து எம்ஜிஆர் உதவி உள்ளார். அதை தற்போது வரை ரஜினி மறக்கவில்லை.