தமிழக அரசியல் வரலாற்றில் எத்தனையோ கட்சிகள், எத்தனையோ தலைவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் சில தலைவர்களால் மட்டுமே காலம் கடந்தும் மக்கள் மனதில் நீடிக்க முடிந்தது. அப்படிப்பட்ட புகழ்பெற்ற சில தலைவர்களால் ஆரம்பித்த கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
ஆரம்பத்தில் இந்த கட்சியை பெரியார், கலைஞர், எம்ஜிஆர் என அனைவரும் ஒன்றாக இணைந்து ஆரம்பித்தனர். ஆனால் இடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவும், சில கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாகவும் எம்ஜிஆர் திமுகவை விட்டு தனியாக பிரிந்தார்.
இதனால் அவருடைய ரசிகர்களும் அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தினார்கள். பின்னர் பெரியார் இவர்கள் இருவரையும் எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். எம்ஜிஆரும் பெரியாரின் அழைப்பை ஏற்று கொண்டு கட்சியில் மீண்டும் இணையும் எண்ணத்தில் இருந்தார்.
இதை கவனித்த அவரின் ரசிகர்களுக்கு இதில் கொஞ்சமும் விருப்பமில்லை. அதனால் அவர்கள் எம்ஜிஆரிடம் தலைவரே உங்களுக்காக நாங்கள் வேறுபட்டு நிற்கிறோம். ஆனால் நீங்கள் மீண்டும் அவருடன் சேர நினைக்கிறீர்கள். இதில் எங்களுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.
அதனால் தயவு செய்து உங்கள் முடிவை எங்களுக்காக மாற்றிக் கொள்ளுங்கள் என ரசிகர்கள் வேண்டுகோள் வைத்தனர். இதையெல்லாம் யோசித்து பார்த்த எம்ஜிஆர் தன்னுடைய ரசிகர்களுக்காக மீண்டும் திமுகவில் இணையும் முடிவை மாற்றிக் கொண்டார்.
அதன்பிறகு ஆரம்பித்தது தான் அதிமுக கட்சி. தன்னுடைய ரசிகர்களுக்காக அந்த கட்சியை தொடங்கிய எம்ஜிஆர் தன்னுடைய இறுதிக் காலம் வரை அவர்களுக்காக மட்டுமே உழைத்து நல்லாட்சி புரிந்தார்.