எம்ஜிஆர், நம்பியார், சிவாஜி தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட மும்மூர்த்திகள். இவர்கள் மூவருக்கும் நல்ல ஒரு நட்பு ரீதியான நடிப்பில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது. சினிமாவிற்கு அப்பாற்பட்ட விழாக்கள் இவர்களை அடிக்கடி பார்க்கலாம். அப்போதெல்லாம் எம்ஜிஆர் மற்றும் நம்பியார் இருவரும் சிவாஜியை ஒரே பாடலை வைத்து அடிக்கடி கலாய் பார்க்கலாம்.
படங்களில் கீரியும் பாம்பும் ஆக இருக்கும் எம்ஜிஆர் மற்றும் நம்பியார் இருவரும் நிஜ வாழ்க்கையில் அண்ணன் தம்பி போல் பழகுவார்கள். அதே காலகட்டத்தில் இருந்த சிவாஜியை இவர்கள் மாமன் மச்சான் என்கின்ற அளவுக்கு நக்கலடிப்பார்கள்.
எம்ஜிஆர் மற்றும் நம்பியார் சிவாஜியை எங்கு பார்த்தாலும் அடிக்கடி கேலி செய்வார்களாம். இதற்கு சாதகமாக இவர்களுக்கு ஒரு பாடலும் அமைந்துவிட்டது. அதை வைத்தே சிவாஜியை உருட்டுவார்களாம். அதிலும் குறிப்பாக வசந்த மாளிகை படத்தில் இவர் நடித்த ஒரு பாடலை வைத்து மரண கலாய் கலாய்ப் பார்க்கலாம்.
கிளாமர் குயின் சிஐடி சகுந்தலாவுடன் “குடிமகனே பெருங்குடிமகனே” பாடலில் நடித்திருப்பார் சிவாஜி. இதில் அவருடன் குடித்துவிட்டு சிவாஜி ஓவர் ஆட்டம் போட்டிருப்பார் இதனால் இந்தப் பாடலை வைத்து அடிக்கடி எம்ஜிஆர் மற்றும் நம்பியார் சிவாஜியை பார்த்து பாடி நகைச்சுவை பண்ணுவார்களாம்.
மேலும் எம்ஜிஆர் மற்றும் நம்பியார் இருவரும் வசந்த மாளிகையில் இந்த பாடலை மட்டும் குறிப்பிடுவதற்கு காரணம், அந்தப் படம் தொடர்ச்சியாக 271 காட்சிகள் ஹவுஸ்புள்ளாக ஓடி சாதனை படைத்ததுடன் பல திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி ஹிட் கொடுத்தது.
இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு வசந்த மாளிகை டிஜிட்டல் மேம்படுத்தி வெளியிட்டனர். அதன் பிறகும் 2019- இல் டிஜிட்டலில் மேம்படுத்தி வெளியிட்டனர். இப்படி இரண்டு முறை டிஜிட்டல் மேம்படுத்திய ஒரே தமிழ் படம் வசந்த மாளிகை மட்டும் தான். அந்த இரண்டு முறையும் வசந்த மாளிகை பெரும் லாபம் சம்பாதித்து கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.