லதா ரஜினிகாந்த் வீட்டில் எம்ஜிஆர் போட்ட சண்டை.. புரட்சித்தலைவர் தந்த சர்டிவிகேட்

அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி முத்திரை படைத்த எம்ஜிஆர், திரையுலகில் வித்தியாசமான ஸ்டைல் ஆக்ஷன் மூலமாக அவரைக் கவர்ந்த நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆகையால் எம்ஜிஆர், ரஜினிக்காக ரஜினியின் மாமனார் வீட்டில் சண்டை போட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

1980ல் நரம்பு முறிவில் பாதிக்கப்பட்ட ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது லதா-ரஜினி இரு வீட்டிலும் அவர்களது காதல் திருமணத்திற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது.

அந்த சமயம் எம்ஜிஆர், சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக லதா குடும்பத்தினரிடம் சண்டை போட்டிருக்கிறார். மேலும் ரஜினி மிகவும் தங்கமான மனிதர். திருமணத்திற்குப் பிறகு உங்களது மகளை சந்தோசமாக, நிச்சயம் நல்லபடியாக பார்த்துக் கொள்வார்.

இதற்கு நானே பொறுப்பு. அதனால் லதாவை ரஜினிக்கு திருமணம் செய்து கொடுப்பதில் எந்த தயக்கமும் காட்டாதீர்கள் என்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ரஜினிக்காக லதாவின் வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அதன் பிறகு எம்ஜிஆர் சொன்னதை மதிக்க வேண்டும் என்பதற்காகவே லதா குடும்பத்தினர் ரஜினியை மருமகனாக ஏற்றுக்கொள்ளும் முடிவிற்கு வந்தனர். அதன் பிறகு ரஜினி-லதா இருவருக்கும் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி திருமணம் நடந்தது.

அன்று முதல் இன்று வரை சமூக வாழ்க்கை, இல்லற வாழ்க்கையில் ரஜினி-லதா இருவரும் சிறந்த தம்பதிகளாக 40 வருடங்களுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்திருக்கின்றனர். இவர்கள் திருமணத்தில் இணைவதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.