தியேட்டரில் படம் வெளியானால் அந்த படத்தை அடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே திருட்டுத்தனமாக பைரசி தளங்களில் வெளியிட்டு விடுகின்றனர். இதனால் பல கோடிகளுக்கு மேல் நஷ்டமாவதாக தயாரிப்பாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
தியேட்டரில் வெளியானால் தான் இந்த நிலைமை என்று பார்த்தால் ஓடிடியிலும் அதை தொடர ஆரம்பித்து விட்டனர். முன்னரெல்லாம் ஓடிடிவியில் ஒரு படம் வெளியானால் அதை டவுன்லோட் செய்து சில பைரஸி தளங்களில் நல்ல ஒளிப்பதிவுடன் வெளியிட்டு விடுகின்றனர்.
ஆனால் தற்போது ஓடிடியில் ஒரு தேதியில் ரிலீஸ் ஆகும் என குறிப்பிட்ட திரைப்படம் ஒன்று ரிலீஸுக்கு மூன்று நாள் முன்னரே இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடிடி தளத்திலிருந்து எப்படி படம் வெளியானது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
சமீபத்தில் இந்திய சினிமா மார்க்கெட்டில் ஆணித்தரமாக காலூன்றிய ஓடிடி தளம் என்றால் அது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தான். நல்ல நல்ல நிகழ்ச்சிகளின் மூலம் மொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் அவர்கள் வாங்கி வெளியிடும் படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட மிமி என்ற திரைப்படம் ஜூலை 30ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாக இருந்தது. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சனோன் என்பவர் நடித்துள்ளார்.
ஆனால் இந்த படம் குறிப்பிட்ட ரிலீஸ் தேதிக்கு முன்னதாக பைரசி தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்த நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் உடனடியாக அந்த படத்தை ரிலீஸ் செய்து விட்டதாம். தியேட்டர்களுக்கு தொல்லை கொடுத்தது போக தற்போது ஓடிடி நிறுவனங்களுக்கும் பைரஸி வலைதளங்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
