சிலருக்கு மேடை ஏறி மைக்கை பிடித்து விட்டாலே புது எனர்ஜி பாய்ந்து விடும். அந்த உற்சாகத்தில் கண்டதையும் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஏராளமான பிரபலங்கள் இருக்கின்றனர். அதில் இயக்குனர் மிஷ்கின் சமீப காலமாக மேடையில் யாரையாவது வசைப்பாடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
அந்த வகையில் இவர் உதயநிதி நடிப்பில் வெளிவந்த கலகத் தலைவன் பட விழாவில் மேடையில் பேசும்போது இயக்குனர் ராஜேஷை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதாவது அவர் காதல் திரைப்படம் எடுக்கிறேன் என்று குட்டிசுவரா போய்விட்டார். இவரை மாதிரி நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
மேலும் ராஜேஷ் இயக்கிய படத்தை நான் பார்த்ததே இல்லை என்றும் அவனை எனக்கு நன்றாக தெரியும் என்றும் ஒருமையில் பேசி அசிங்கப்படுத்தி இருந்தார். இது எப்போதுமே அவர் வழக்கமாக பேசும் பேச்சு தான். இருப்பினும் இதனால் கடுப்பான உதவி இயக்குனர்கள் மற்றும் ராஜேஷை சேர்ந்தவர்கள் அனைவரும் சேர்ந்து இது குறித்து இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் மிஷ்கின் பேசிய பேச்சுக்கு நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்க ஆரம்பித்தது. இதை கேள்விப்பட்ட மிஷ்கின் ராஜேஷுக்கு போன் செய்து என்னடா தம்பி உன்ன திட்றதுக்கு எனக்கு உரிமை இல்லையா, தவறா பேசி இருந்தால் மன்னித்துவிடு என்று கூறி சமாதானப்படுத்தி இருக்கிறார்.
இப்படி அவர் உரிமையுடன் பேசியதை கேட்ட ராஜேஷ் சமாதானம் அடைந்து இயக்குனர் சங்கத்திற்கும் போன் செய்து பேசியிருக்கிறார். அதாவது அவர் என்னுடைய அண்ணன் மாதிரி, அதனால் ஒரு உரிமையில் அந்த அளவிற்கு பேசிவிட்டார். அதை யாரும் பெரிது படுத்த வேண்டாம். இந்த பிரச்சனையை இத்துடன் விட்டுவிடுங்கள் என்று கூறி இருக்கிறார்.
அதன் காரணமாகவே தற்போது மிஷ்கின் மீது இயக்குனர் சங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலரும் அவரை திட்டுவதா, பாராட்டுவதா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் இவர் முதலில் திட்டி விட்டு பின்னர் மன்னிப்பு கேட்பதையே ஒரு வேலையாக வைத்துக் கொண்டு திரிகிறார்.