Director Mohan G: தன் திறமையால், இயக்குனராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருபவர் மோகன் ஜி. இவரின் படைப்புகள் எல்லாமே பிரச்சனையை உண்டுபடுத்தும் விதமாய் அமைந்திருக்கும். அவ்வாறு இம்முறை அஜித் மச்சான் இல்லாமல் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு வருகிறார்.
அவ்வாறு இவர் மேற்கொண்ட முதல் படம் பழைய வண்ணாரப்பேட்டை. அதைத்தொடர்ந்து அஜித் மச்சான் ஆன ரிச்சர்ட் ரிஷியை வைத்து ஜாதி படம் எடுத்து பல விமர்சனத்திற்கு ஆளாகினார். இப்படம் அவருக்கு படும் தோல்வியை தந்தது. அதை தொடர்ந்து ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற படங்களை இயக்கியும், தயாரித்தும் வந்தார்.
ஆனாலும் இவருக்கு பெரிய ஹீரோக்கள் ஆன விஜய், அஜித்தை வைத்து படம் எடுக்க ஆசை உள்ளதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். அது இன்று வரை நிறைவேறாமல் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் சமீபத்தில் பகாசூரன் படமும் சர்ச்சை கொள்ளும் படமாய் இருந்தது.
இனி இயக்கும் படமாவது வெற்றி படமாக அமைய வேண்டும் என்னும் முயற்சியில் தன் திரௌபதி படத்தை மீண்டும் திரௌபதி 2 என எடுக்கப் போகிறாராம். இப்படம் ஏற்கனவே மக்களிடையே எதிர்மறை விமர்சனங்களை பெற்று தந்தது. இந்நிலையில் பாகம் 2ல் ரிச்சர்ட் ரிஷி ஹீரோ இல்லையாம்.
இம்முறை நடிகர் ஜீவாவை நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் இருந்து வருகிறாராம். ஏற்கனவே ஜீவாவிற்கும் எந்த படங்களும் கை கொடுக்காத நிலையில் இருப்பதால், இருவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் ஜீவாவின் கால்ஷீட் கேட்டு வருகிறார்.
இப்படத்தில் ஜீவா நடிக்கிறார் என்றால், இப்படம் கண்டிப்பாக ஜாதி படமாக இருக்காது என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. ஜாதி படம் போல ஏழரை கூட்டும் படங்களுக்கு கண்டிப்பாக ஜீவா போன்ற பெரிய ஹீரோக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது உறுதியான ஒன்று.