Vishnu Vishal: ராட்சசன், கட்டாகுஸ்தி பட வெற்றிகளை தொடர்ந்து விஷ்ணு விஷால் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் சமீப காலமாக அவர் சைலன்ட் மோடில் இருப்பது போல் தெரிகிறது.
ஆனால் அவர் சத்தம் இல்லாமல் ஏகப்பட்ட படங்களை கமிட் செய்து வைத்திருக்கிறார். சொல்லப்போனால் தற்போது கோலிவுட்டில் அவர்தான் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகரும் கூட.
தற்போது அவர் தயாரித்து உள்ள ஓ எந்தன் பேபி படம் ரிலீஸ் ஆக தயார் நிலையில் இருக்கிறது. அது இல்லாமல் அவருடைய நடிப்பில் இரண்டு வானம், மோகன்தாஸ், ஆரியன், ஜல ஜால கில்லாடி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது.
மீண்டும் மிரட்ட வரும் ராட்சசன் டீம்
இது இல்லாமல் பேச்சுலர் பட இயக்குனர், கட்டா குஸ்தி இயக்குனர், அருண் ராஜா காமராஜ், ஹாட்ஸ்பாட் இயக்குனர் ஆகியோருடன் தலா ஒரு படம் இருக்கிறது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் ராட்சசன் 2 படத்தை எடுப்பதிலும் அவர் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இந்த டீம் மீண்டும் இணைவது ரசிகர்களுக்கும் சந்தோசம் தான். முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதும் ஆடியன்ஸின் ஆசை.
இப்படியாக விஷ்ணு விஷால் கைவசம் 9 படங்கள் இருக்கிறது. ஆக மொத்தம் அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிஸியான நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை.