இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 6 படங்கள்.. சக்கை போடு போட வரும் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ்

This Week OTT Release Movies: திரையரங்குகளில் வெளியாகும் படங்களை விட சமீபகாலமாக ஓடிடியில் எப்போது படம் வெளியாகும் என்று தான் ரசிகர்கள் இப்போது ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கு ஏற்றார்போல் திரையரங்கு வெளியிட்டை காட்டிலும் ஓடிடியில் நிறைய படங்கள் வெளியாகிறது. அந்த வகையில் இந்த வாரம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகும் ஆறு படங்களை பார்க்கலாம்.

அந்த வகையில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பாபா பிளாக் ஷீப் படம் வெளியாகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே ஆன கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அப்துல் அஸீஸ் மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்போது நாளை ஓடிடிக்கு இந்த படம் வெளிவர இருக்கிறது.

Also Read : ராஜேஷ் இயக்கத்தில் ஹீரோக்கு இணையாக சந்தானம் நடித்த 5 படங்கள்.. தேனடையை விடாமல் துரத்திய பார்த்தா

இதைத்தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நட்டி நடராஜனின் இன்பினிட்டி படம் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தொடர்ந்து நடக்கும் மர்ம கொலைகளில் இருந்து துப்பறியும் அதிகாரியாக இருக்கும் நட்டி நடராஜ் கொலைக்கான காரணத்தை கண்டறிகிறாரா என்பதுதான் இன்பினிட்டி.

மேலும் இதே நாளில் ஜி5 ஓடிடி தளத்தில் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்ட டிடி ரிட்டன்ஸ் படம் வெளியாகிறது. எப்போதும் உண்டான ஒரே சாயலில் சந்தானம் நடிக்காமல் வித்தியாசமான பரிமாணத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார்.

Also Read : ஜெயிலர் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்.. 600 கோடி வசூலை பார்த்ததும் ஜர்க் அடிச்ச சன் பிக்சர்ஸ்

சந்தானமே எதிர்பார்க்காத அளவு இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். மேலும் நல்ல நிலவுல்ல ராத்திரி என்ற படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் மற்றொரு படமான நீரஜா ஹெச்ஆர் ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் இணைய தொடர்களாக சோனி தளத்தில் ஸ்கேன் 2003 தி தெல்கி ஸ்டோரி மற்றும் ஹாட் ஸ்டாரில் தி ஃப்ரீலேன்சர் ஆகியவை வெளியாகிறது. ஆகையால் இந்த வாரம் ரசிகர்கள் தொடர்ந்து ஓய்வு நேரங்களில் வரிசையாக படங்களை பார்க்கும்படி ஓடிடி நிறுவனம் நிறைய படங்களை வெளியிட உள்ளது.

Also Read : ஓடிடி ஜெயிலர் வசூலுக்கு ஆப்பு அடித்த விஷமிகள்.. என்னடா இது கலாநிதிக்கு வந்த சோதனை