Dhanush : கடந்த சில நாட்களாகவே இணையத்தில் பேசு பொருளாக மாறியது தனுஷ் மற்றும் மிருணாள் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக உள்ள செய்திதான். முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் இப்போது சினிமாவில் செம பிசியாக இருந்து வருகிறார்.
ஒருபுறம் டஜன் படங்களில் நடித்து வரும் தனுஷ் டைரக்ஷன், ப்ரொடக்ஷன் என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் இருவரும் பிரிய முடிவெடுத்த விவாகரத்து பெற்றனர். ஆனாலும் தங்களது மகன்களின் பள்ளி விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள்.
அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று நம்பி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் ஊடகங்களில் தனுஷ், மிருணாள் ஆகியோரை இணைத்து செய்திகள் வெளியாக தொடங்கியது.
தனுஷ் உடன் இணைத்து பேசுவதை பற்றி கூறிய மிருணாள் தாகூர்
இதுகுறித்து இப்போது மிருணாள் தாகூர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது தன்னை தனுஷ் உடன் இணைத்து வரும் செய்தி முற்றிலும் வதந்தி. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். சமீபத்தில் சன் ஆப் சர்தார் 2 பட விழாவில் தனுஷ் கலந்து கொண்டது தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.
அஜய் தேவகன் மற்றும் தனுஷ் இடையே ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது. அவர் அழைத்ததால் தான் இந்த நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார். இதை வைத்து எங்களை இணைத்து பேசுவது தனக்கு சிரிப்பை தான் வரச் செய்தது.
நாங்கள் இருவரும் நல்ல நட்புடன் பழகி வருவதாக மிருணாள் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தொடர்ந்து தனுஷ் மீது பல்வேறு சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் இப்போது மிருணாள் இந்த சம்பவம் குறித்து தெளிவுபடுத்தி இருக்கிறார்.