என்னோட பட காலெக்ஷன் ரெட்ரோ & கங்குவா தொட முடில.. சூர்யா தொடர் பிளாப்க்கு சப்ப கட்டு கட்டிய இயக்குனர்

Cinema : ஒரு படம் இயக்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அப்படியே திரைப்படம் திரையில் ஓடவிட்டால் மிகப்பெரிய நஷ்டம் தயாரிப்பாளருக்கு மற்றும் இயக்குனருக்கு தான். இதனால் நடிகர்களின் மார்க்கம் சினிமாவில் வெகுவாக குறைகிறது.

தற்போது இயக்குனர் பாண்டிராஜ் சினிமாவின் உச்ச கட்ட படங்களில் ஹிட் கொடுத்த வருகிறார். சூர்யாவின் தொடர் படங்கள் ஏன் ஹிட் ஆகவில்லை என்ற கேள்விக்கு பாண்டியராஜ் தன் பேட்டியில் பதிலளித்திருக்கிறார்.

இயக்குனர் பாண்டியராஜ் கூறியதாவது “தம்பி படம் தான் நல்லா ஹிட் கொடுக்க வேண்டும் அண்ணன் படம் ஹிட் கொடுக்க கூடாது என்று நான் எந்த படத்தையும் இயக்கவில்லை. சொல்லப்போனால் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தான் நாங்கள் மூன்று வருடம் கஷ்டப்பட்டு இயக்கினோம்.

தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவுக்கு சந்தோஷம்தான். ஆனால் என்ன வசூல் அளவில் சற்று குறைவாக இருக்கிறது. அதற்குப் பின் வந்த கங்குவா மற்றும் ரெட்ரோ திரைப்படங்கள் கூட நான் இயக்கிய படத்தை தொட முடியாது.

கொரோனா காலங்களில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு மட்டும் மூன்று வருடங்கள் ஒதுக்கி கஷ்டப்பட்டு படத்தை இயக்கி முடித்தோம். ஹிட் ஆகாதது என்னுடைய தவறுதான் அதற்காக ஒன்னும் செய்ய முடியாது”.

இப்படி தன்னுடைய பேட்டையில் ஆணித்தனமாக பதில் அளித்து இருக்கிறார் இயக்குனர் பாண்டியராஜ். சூர்யாவின் திரைப்படங்களை ஹிட் கொடுக்காததற்கு தற்போது சப்ப கட்டுகட்டி வருகிறாரே என்று சூரியாவின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றன.