இயக்குனர் மிஷ்கினை பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. பெரும்பான்மையான படவிழாவில் மிஷ்கின் தான் சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். மரியாதை நிமித்தமாக இவரை கூப்பிட்டதால் படத்தைப் பற்றி நல்ல விஷயங்களை பேசி விட்டு வர வேண்டும்.
ஆனால் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் மற்றவர்களை கேலி, கிண்டலாக பேசி சர்ச்சையில் சிக்குகிறார். இது ஒரு முறை என்றால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு முறையுமே தொடர்ந்து இதையே தான் மிஷ்கின் செய்து வருகிறார்.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் கலகத்தலைவன் படவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் இயக்குனர் மகிழ்திருமேனி படத்தை ஒன்று கூட நான் பார்த்ததில்லை என்று சொல்லி அவமானப்படுத்தினார்.
ஆனால் மகிழ்திருமேனி பேசுகையில், மிஷ்கினுடைய எல்லா படங்களுமே நான் பார்த்துள்ளேன், அவர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ராஜேஷை ஒரு முறை குட்டிச்சுவரா போன டைரக்டர் என்று மிஷ்கின் அசிங்கப்படுத்துகிறார்.
இவ்வாறு தொடர்ந்து மிஷ்கின் பிரபலங்களை அவமானப்படுத்தி வருவதால் இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். ஆகையால் மிஷ்கினிடம் இயக்குனர் சங்க உறுப்பினர்கள் ராஜேஷிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்தீர்கள் என்றால் இந்த பிரச்சனையை நாங்கள் சும்மா விட மாட்டோம் என உறுதியாக கூறியுள்ளனர். இதனால் மிஷ்கின் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இதன் பிறகாவது மிஷ்கின் மற்ற இயக்குனருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து நடப்பார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.