கவினுக்காக விட்டுக் கொடுத்த மிஷ்கின்.. வெளியில முரடாக இருந்தாலும் தங்கமான மனசு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கவின். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான டாடா படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை பெற்றது. இதனால் கவினின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு தற்போது அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் டான்ஸ் மாஸ்டராக வலம் வந்த சதீஷ் இயக்குனராக புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் கவினும் அவருக்கு ஜோடியாக அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அத்ராணியும் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைப்பதாக தகவல் வெளியானது.

Also Read : அயோத்தி பட நடிகையுடன் ஜோடி சேரும் கவின்.. டாடா வெற்றிக்குப் பிறகு இணையும் கூட்டணி

ஆனால் திடீரென இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லை என்று கூறியதால் படம் டிராப்பானதாக தகவல் வெளியானது. இதனால் கவினும் மிகுந்த கலக்கத்துடன் இருந்துள்ளார். அதன் பின்பு அனிருத்தே தாமாக முன்வந்து இசையமைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போது மீண்டும் ஒரு புதிய பிரச்சனை வந்துள்ளது. அதாவது இந்தப் படத்தின் தலைப்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக மிஷ்கின் தன்னுடைய படத்திற்காக அந்த தலைப்பை தேர்வு செய்த வைத்திருந்தாராம்.

Also Read : விஜய் சேதுபதி-மிஷ்கின் கூட்டணியில் ஏற்பட்ட பிளவு.. கடுப்பில் இயக்குனர் செய்த சம்பவம்

எப்போதுமே மிஷ்கினை பொருத்தவரையில் தன்னுடைய தலைப்பை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார். ஆனால் கவினுக்காக தன் தலைப்பை மிஸ்கின் விட்டுக் கொடுத்து உள்ளாராம். மேலும் தலைப்பு ரெடியானதால் வருகின்ற ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

வெளியில் தான் மிஷ்கின் ஏடாகூடமாக பேசி பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் மீது தப்பான அபிப்பிராயமும் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் அவருக்கு தங்கமான மனசு இருப்பது கவினுக்காக தலைப்பு விட்டுக் கொடுத்ததில் இருந்தே தெரிவதாக சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : விஜய் சேதுபதியை வைத்து ரணகளம் செய்ய காத்திருக்கும் மிஷ்கின்.. அந்த பட சாயலில் ஒரு திரில்லர் கதை ரெடி