பிறக்கும்போதே மன்னனாக பிறந்த நாக சைதன்யா.. முழு சொத்து மதிப்பு

Naga chaitanya: பிறக்கும்போதே தங்கத்தட்டில் பிறக்கும் பாக்கியம் சிலருக்கு தான் கிடைக்கும். அப்படிதான் நாக சைதன்யாவும் மன்னனாக பிறந்தவர். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகர்ஜுனாவுக்கும், லட்சுமி டகுபதி என்பவருக்கும் மகனாக பிறந்தவர் தான் நாகசைதன்யா.

ஜோஷ் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நாக சைதன்யா தொடர்ந்து சில ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்களிலேயே இவர்கள் இருவரும் பிரியப் போவதாக அறிவித்தனர்.

இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்து. இந்நிலையில் கடைசியாக வெங்கட் பிரபுவின் கஸ்டடி என்ற படத்தில் நாக சைதன்யா நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் போகவில்லை. தற்போது நாகச் சைதன்யா ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 10 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். இது தவிர சில தொழில்களிலும் முதலீடு செய்து இருக்கிறார்.

Also Read : சுகர் வந்து அவதிப்பட்ட 5 பிரபலங்கள்.. 26 வயதிலேயே சமந்தாவிற்கு ஏற்பட்ட சர்க்கரை நோய்

நாக சைதன்யாவின் முழு சொத்து மதிப்பு

இந்த சூழலில் நாகர்ஜுனாவுக்கு கிட்டத்தட்ட 3000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு இருக்கிறது. அவருடைய மகன் நாக சைதன்யாவுக்கு இப்போது 154 கோடி மதிப்பில் சொத்து உள்ளது. மேலும் பிஎம்டபிள்யூ, ஃபெராரி எஃப்430, ரேஞ் ரோவர் என விலை உயர்ந்த சொகுசு கார்களும் நாக சைதன்யா கைவசம் இருக்கிறது.

மேலும் சமந்தா, நாக சைதன்யாவை விட்டு பிரியும் போது தனக்கு ஜீவாம்சம் வேண்டாம் என்று கூறிவிட்டார். அந்த அளவுக்கு நாக சைதன்யாவை விட சமந்தாவின் சொத்து மதிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் நாக சைதன்யா இப்போது தன்னுடைய பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read : தளபதி 68 பட குழுவை பாடாய்ப்படுத்தும் விஜய்.. சென்னை வந்ததும் பரபரப்பான வெங்கட் பிரபு