2017ஆம் ஆண்டு சினிமா நட்சத்திரங்களாகிய சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெரிய குடும்பத்திற்கு மருமகளாக மாறிய சமந்தாவிற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது. தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா வீட்டு மருமகளாக வலம் வந்தார் சமந்தா.
பின்னர் 2021ஆம் ஆண்டு இந்த ஜோடிகள் பிரிந்து வாழ்வதாக அறிவித்து முறையாக விவாகரத்தும் பெற்று விட்டனர். கல்யாணமான பிறகு சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு நாக சைதன்யா குடும்பம் மறுப்புதெரிவித்து வந்தது. இதனாலேயே இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை வரத் தொடங்கி விவாகரத்து வரை சென்று விட்டது.
இப்பொழுது நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 2024 ஆம் ஆண்டு சோபிதா துளிபாலா என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார். தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். 2013ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் நட்சத்திர தம்பதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சமந்தாவிற்கு திருமணத்திற்கு பின்பு நடிக்க கூடாது என கண்டிஷன் போட்ட இவர்கள் இப்பொழுது சோபிதா துளிபாலாவிற்கு எந்த ஒரு தடையும் போடவில்லையாம். இவர் தமிழில் பல படங்களில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளி வருகிறது.
முதற்கட்டமாக அட்டகத்தி மற்றும் கெத்து படங்களில் கலக்கிய தினேஷ் உடன் ஒரு படத்தில் ஜோடி போடுகிறார். பா ரஞ்சித் தினேஷ் மற்றும் ஆர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கும்பகோணம் வட்டாரத்தில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இது ஒரு பீரியாடிக் பிலிம். இதில் நாக சைதன்யாவின் தற்போதைய மனைவி சோபிதா துளிபாலா ஹீரோயினாக நடிக்கிறார்.