மணிவிழா தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது. தம்பிகள் அனைவரும் விருந்தாளிகளை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள். எப்படியாவது அண்ணனை உச்சி குளிர வைக்க வேண்டும் என அண்ணன் அடிக்கும் மேளத்துக்கு ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
விசாலாட்சி அம்மையார் தான் ஒவ்வொரு சம்மந்தார்களிடமும் மருமகள்களை பற்ற வைத்துக் கொண்டே இருக்கிறார். குறிப்பாக அவர் ஜனனியை பற்றி பேசியது சக்தியை எரிச்சலடைய செய்தது. குணசேகரன் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நாச்சியப்பனிடம், விசாலாட்சி அம்மையார், உங்கள் மகள் தான் இங்கே ராஜ்ஜியம் செய்து கொண்டிருக்கிறார். தாணும் வாழாமல் மற்றவர்களையும் வாழ விடாமல் செய்கிறாள் என சொல்லி அசிங்கப்படுத்துகிறார். இன்னொரு பக்கம் கதிர், மாமனார் வர லேட் ஆனதால் ஆத்திரப்படுகிறார்.
நந்தினி இடம் அகராதித்தனமாக பேசி வாங்கி கொள்கிறார். உங்க அப்பன என்ன இன்னும் காணும் என்று கேட்கும்போது உஷாரான நந்தினி, உங்களுக்கு கூஜா தூக்கினால் அவர் உங்கள் மாமனார் உங்களுக்கு எதிராக செயல்பட்டால் எங்க அப்பனா என வசமாக வாங்கி கட்டிக் கொண்டார்.
அதே சமயம் போலீஸ் உள்ளே வந்து விசாரிக்கிறது, குணசேகரன் ஒழுங்கா இருக்கிறாரா, பரோலை நீட்டிப்பு செய்யலாமா என மருமகளிடம் கேட்டு சம்மதம் வாங்கினார்கள். இதை சற்றும் எதிர்பாராத குணசேகரன் இவர்களால் தான் நாம் இப்படி சந்தோசமாக இருக்கிறோமோ என்பதை எண்ணி கர்வம் கூத்தாடுகிறார்.