அமெரிக்கா வரை விஜய் பெயரை பங்கம் பண்ணும் நெப்போலியன்.. தேரை இழுத்து தெருவுல விட்ட சம்பவம்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார். இவரது பெயரை கேட்டால் ஆர்ப்பரிக்கும் விசில் சத்தம், இவருக்காக தங்களது உயிரை கூட துச்சமென நினைக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதன் காரணமாகவே விஜயின் படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்க வேண்டுமென விஜய் பார்த்து பார்த்து கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இப்படி ரசிகர்களுக்காக பல விஷயங்கள் யோசிக்கும் விஜய், அவரது அப்பா அம்மாவிடம் பல வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயின் அனுமதியில்லாமல் விஜயின் பெயரை பயன்படுத்தி அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில், அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த விஷயம் நடந்து பல காலங்கள் ஆனதால் விஜய் இன்று வரை தனது தந்தையை மன்னிக்காமல் உள்ளார்.

மேலும் விஜய் அவரது மனைவி சங்கீதா மற்றும் மாமனார் பேச்சை அதிகமாக கேட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனிடையே நடிகர் விஜய்யின் குடும்ப தகராறு குறித்து பிரபல நடிகர் கூறியுள்ளார். 2006 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் உருவான போக்கிரி படம் பெரும் ஹிட்டானது. இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் நெப்போலியன் .

அந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜயை பார்க்க நெப்போலியனின் நண்பர்கள் ஆசைப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விஜயிடம் அனுமதி வாங்காமல் சென்ற நெப்போலியனை, அவரது நண்பர்கள் முன்பாகவே விஜய் அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதன் காரணமாக நெப்போலியன் விஜயுடன் நடிப்பதையும், அவருடன் பேசுவதையும், விஜயின் படங்களை பார்ப்பதையும் அவர் நிராகத்து வருகிறார்.

தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகியுள்ள நெப்போலியன், அங்கு விஜயின் நடிப்பில் பொங்கல் பாண்டியை முன்னிட்டு வெளியான வாரிசு படம் அங்குள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இதனிடையே இப்படம் குறித்த சமீபத்திய பேட்டியில் பேசிய நெப்போலியன், தனக்கும் விஜய்க்கும் போக்கிரி படப்பிடிப்பிலிருந்தே சின்ன தகராறு உள்ளது.

15 வருடங்களாக இந்த பிரச்சனை உள்ள நிலையில், தற்போது விஜயுடன் நான் எந்த ஒரு மன வருத்தங்களும் இல்லாமல் மீண்டும் பேச தயார். ஆனால் அவர் முதலில் அவரது அப்பா,அம்மா கிட்ட பேசட்டும், அதன் பின்பு நான் அவருடன் பேசுகிறேன் என தெரிவித்துள்ளார். இப்படி கூறி விஜயின் குடும்பத்தகறாரை அமெரிக்கா வரை வெட்ட வெளிச்சமாகியுள்ளார் நெப்போலியன்.