பாரதிராஜாவை எதிர்த்து பேசிய நெப்போலியன்.. முதல் படத்திலேயே நடந்த ரணகளம்

90ஸ்களில் தன் மாறுபட்ட நடிப்பால் வில்லனாகவும், ஹீரோவாகவும் வலம் வந்தவர்தான் நடிகர் நெப்போலியன். தற்பொழுது சினிமாவிற்கு இடைவெளி விட்ட இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலை காட்டி வருகிறார். அந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட ரணகளமான சம்பவத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் தன் முதல் படத்திலேயே இவ்வாறு நடந்தது இவருக்கு சினிமா மீது ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. 1991ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து படத்தில் மூலம் நடிக்கும் வாய்ப்பு பெற்றவர் நெப்போலியன். அதன் பின் கிழக்கு சீமையிலே, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்களில் நடித்த தன் திறமையை வெளிக்காட்டினார்.

மேலும் இவர் படங்களில் வில்லனாகவும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அதை தொடர்ந்து தற்போது தன் முதல் படத்தில் பாரதிராஜாவால் தன் நிஜப்பெயர் மாற்றப்பட்டதாக கூறி கவலைப்பட்டு வருகிறார். இவரின் உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி. இத்தகைய பெயர் சினிமாவிற்கு வேண்டாம் என்றும் நான் உனக்கு பெயர் வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் பாரதிராஜா.

அதை தொடர்ந்து இவரை ஆறு பெயர்களை தேர்வு செய்து வருமாறு கூறியிருக்கிறார். இவர் தேர்ந்தெடுத்த பெயர்களில் ராகுல் என்ற பெயரை அப்படத்தின் ஹீரோவிற்கு வைத்துவிட்டாராம். அதன்பின் இந்த பெயர் எல்லாம் உனக்கு செட்டாகாது நானே உனக்கு பெயர் வைக்கிறேன் என்று நெப்போலியன் என்ற பெயரை சொன்னாராம்.

எனக்கு பெயர் பிடிக்கவில்லை என் நண்பர்கள் எல்லாம் என்னை கிண்டல், கேலி செய்வார்கள் என்று எதிர்த்து பேசி இருக்கிறார். அதற்கு பாரதிராஜா உன் உயரத்துக்கு ஏற்ற பெயர் இதுதான். மேலும் இனி சினிமாவில் எப்படி பெயர் எடுக்கிறாய் என்பதை பொறுத்திருந்து பார் என்று சவால் விட்டிருக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு நெப்போலியன் ஒரு நாள் கூட தன் பெயர் மாற்றப்பட்டதற்காக கவலைப்பட்டது இல்லையாம். ஆரம்பத்தில் ஒரு மாதிரி கஷ்டமாக இருந்த இவருக்கு இந்த பெயரே சினிமாவில் ஒரு அங்கீகாரம் அமைத்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.