நவாசுதின் மற்றும் விஜய் சேதுபதியுடன் நடிப்பது அதிஷ்டம் என கூறிய பிரபல நடிகர்.. இவர் அஜித் பட வில்லனா ஆச்சே!

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பேராதரவால் வசூலை வாரி குவித்து வருகின்றன.

மற்ற நடிகர்களை போல ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என கூறாமல் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று தத்ரூபமாக தனது நடிப்பை  வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டும் கொடி கட்டி பறந்த விஜய் சேதுபதி தற்போது அண்டை மாநிலங்களான தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

கபீர் தூஹான் சிங் 2015ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவின் மூலம் அறிமுகமானார். ஆனால் அதே ஆண்டுதான் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப் படத்திலும் நடித்திருந்தார். இவருக்கு முதல் படமே தமிழ் சினிமாவில் பெரிய அளவு வெற்றி பெற்றதால் தமிழ் நடிகர்கள் மீது அவருக்கு எப்போதும் தனி பாசம் இருக்கும்.

nawazuddin siddiqui vijay sethupathi kabir duhan singh
nawazuddin siddiqui vijay sethupathi kabir duhan singh

அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் ரெக்க, காஞ்சனா, அருவம் மற்றும் ஆக்சன் போன்ற பல படங்களில் நடித்தார். தற்போது நவாசுதீன் சித்திக் உடன் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் விஜய்சேதுபதி படத்திலும் நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரது படத்தில் நடிப்பது தனக்கு பெருமையாக இருப்பதாகவும். இப்படிப்பட்ட நடிகர்களுடன் நடிப்பது தனக்கு நடிப்பு பயிற்சி பள்ளியில் கற்றுக் கொள்வது போலவே இருக்கிறது என கபீர் தூஹான் சிங் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்படிப்பட்ட நடிகர்களுடன் நடிப்பது தான் அதிர்ஷ்டமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

என்ன தான் இருந்தாலும் ஒரு நடிகர்களை பற்றி மற்றொரு நடிகர் புகழ்ந்து பேசுவது அரிது எனவும்  தற்போதுகபீர் தூஹான் சிங் ஒரு நடிகரைப் பற்றி புகழ்ந்து பேசியதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.