லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த ஆண்டு சொந்த வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடந்துள்ளது. அதாவது தனது காதலன் விக்னேஷ் சிவனை கரம் பிடித்து நான்கே மாதத்தில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இந்நிலையில் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி நயன்தாரா 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ஆனால் இந்த வருடம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரியளவில் அவரது படங்கள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் பழைய ஃபார்முக்கு இறங்கி உள்ளார் நயன்தாரா. அதாவது அவரது நடிப்பில் அடுத்தடுத்து 6 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக கோல்டு என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி தமிழ், மலையாள ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்த நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் வினய், சத்யராஜ் ஆகியோர் நயன்தாராவுடன் நடித்துள்ளனர். இதைத்தொடர்ந்த அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் கால் பதிக்கிறார்.
இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இதைத்தொடர்ந்த அகமது இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா இறைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75 வது படமும் உருவாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து மலையாள படம் ஒன்றிலும் நிவின் பாலி உடன் நடித்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை குஷிபடுத்த உள்ளது. மேலும் வருகின்ற நவம்பர் 18 நயன்தாராவின் வேறு படங்களில் அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.