இதனால்தான் நயன்தாரா மாட்டிகிட்டு முழிக்கிறாங்க.. நடந்தது இதுதான்- வலைப்பேச்சு பிஸ்மி

Nayanthara : நடிகை நயன்தாரா அவர்கள் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகை. அதுமட்டுமல்லாமல் தனித்து படம் நடித்து பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்த ஒரு நடிகை. திரையுலகில் ஹீரோயின் தனித்து படம் எடுத்தாலும் வரவேற்பை பெரும் என்று எடுத்துக்காட்டாக இன்றும் வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது பழைய கால வாழ்க்கை பல சிக்கலை தந்தாலும், இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து திருமணம் செய்து தனக்கென இரண்டு குழந்தைகள் என குடும்ப வாழக்கையை நிறைவு வாழ்க்கையாக வாழ்ந்து வருகிறார் நயன்தாரா.

இவரது திருமணம் வீடியோ ஆவணப்படமாக வெளியிடப்பட்டது. இது வெளியிட்ட நாளிலிருந்து ஏகப்பட்ட சிக்கல். தனுஷ் அவர்கள் நயன்தாரா மீது வழக்கு பதிவு செய்து அது ஒருபக்கம் போய் கொண்டிருக்க, தற்போது சந்திரமுகி படக்குழு நயன்தாரா ஆவணப்படத்தின் மீது வழக்குபதிவு செய்துள்ளார்கள்.

இதனால்தான் நயன்தாரா மாட்டிகிட்டு முழிக்கிறாங்க..

இதைப்பற்றி தற்போது வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் இதைப்பற்றிய கருத்தை முன்வைத்துள்ளார். அதாவது நயன்தாரா அவர்கள் சட்டப்படி தவறாக நடந்துகொண்டுள்ளார். தனுஷ் அவர்களிடம் அனுபதி பெற்று படக்காட்சியை வைத்திருந்தால் பிரச்சினை இல்லை. இவர் அனுமதி கேட்காமல் வைத்தது தனுஷ் அவர்களுக்கு பிடிக்கவில்லை அதனால் வழக்கு பதிந்தார்.

ஆனால் சந்திரமுகி படக்குழு ஆவணப்படம் இத்தனை மாதங்களுக்கு பிறகு வழக்கு பதிவு செய்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை நயன்தாராவிற்கு சந்திரமுகி படக்குழுவிற்கும் ஏற்கனவே தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடந்திருக்கும் அது ஒத்து வரவில்லை என்றவுடன் தற்போது வழக்குப்பதிவு செய்திருக்கலாம் என்றும் வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.

ஆனால் எதுவாக இருந்தாலும் copyrights இருப்பவரிடம் அனுமதி பெறவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதை நயன்தாரா பின்பற்றவில்லை இதுவே இந்த பிரச்சினைகளுக்கு காரணம் என வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.