Nayanathara : நடிகை நயன்தாரா அவர்கள் இன்று சினிமாவில் எந்த நடிகையும் அடைய முடியாத உச்சத்தில் இருக்கிறார் என்றே கூறலாம். மிகவும் கஷ்டமான பாதைகளை கடந்துதான் நயந்தாரா இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்று அனைவரும் அறிந்ததே.
தற்போது அனைவராலும் லேடி சூப்பர்ஸ்டார் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு திரையுலகத்தில் மேலோங்கி நிற்கிறார். பெரும்பாலும் நிறைய ஹிட் படங்களை கொடுத்து, நிறைய முன்னணி நடிகர்களுடன் நடித்து அதே இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார் என்றே கூறலாம்.
லேடி சூப்பர்ஸ்டார் இவங்கதான் கமல்ஹாசன் பேச்சு..
தற்போது கமல்ஹாசன் அவர்கள் ஒரு விழாவில் பழம்பெரும் நடிகை வைஜயந்தி மாலா அவர்களுக்கு அவார்டு கொடுக்கும் போது, வைஜயந்தி மாலா அவர்களை இந்திய அளவில் முதல் லேடி சூப்பர்ஸ்டார் என்றால் எனக்கு தெரிஞ்சு இவங்கதான் என்று வைஜயந்தி மாலா அவர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.
ஆமாம் அன்று வைஜெயந்தி மாலா அவர்கள் சினிமா துறையில் முன்னணி பெண் நட்சத்திரமாக வலம் வந்துள்ளார். திரை உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து இருக்கிறார். இவர் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்து பிரபலமானவர். அதனால் இவரை பான் இந்தியா நடிகை என்றே கூறியிருக்கிறார்கள்.
நடிகை மட்டுமல்லாமல் கர்நாடக சங்கீதம், நடனம் என்று அன்று சினிமாவில் உச்சத்தில் இருந்திருக்கிறார். திரையுலகம் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆகத்தான் இருந்திருக்கிறார் வைஜெயந்திமாலா. இந்திய காங்கிரஸ் கட்சியில், திராவிட முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி என இவரது அரசியல் பயணமும் பெரிது.
ஆகவே கமல்ஹாசன் அவர்கள் அப்போது உள்ள காலகட்டத்தில் இவர்தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்றும். அது மட்டுமல்லாமல் இந்திய அளவில் இவர் தான் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் வைஜெயந்தி மாலா அவர்களை புகழ்ந்துள்ளார். இவருக்கு விருது கொடுப்பது எனக்கு பெருமை என்றும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் நான் சென்று விட வேண்டும் என்றும் நினைத்திருந்தேன் இவ்வாறு வைஜெயந்திமாலா அவர்களை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.
கிட்டத்தட்ட தற்போது இருக்கும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களும் முதல் லேடி சூப்பர் ஸ்டார் வைஜயந்தி மாலா அவர்களும் கடந்து வந்த பாதை கடினமான பாதை. ஒவ்வொரு பெண்ணுக்கும் எடுத்துக்காட்டாக இந்த இரண்டு பெண்மணிகளும் இருந்து வருகிறார்கள். எந்த துறை என்பது முக்கியமல்ல எவ்வளவு தூரம் நாம் அதில் நிலைத்திருக்கிறோம் என்பதை முக்கியம் என்று உணர்த்தியுள்ளார் வைஜெயந்தி மாலா.