Annapoorani First Day Collection: நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75வது படமாக உருவாகி இருக்கும் அன்னபூரணி நேற்று வெளியானது. ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர்களிலேயே அதிக கவனம் ஈர்த்தது.
அதை தொடர்ந்து நேற்று படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வந்தனர். அதன்படி அக்ரஹாரத்து மாமியாக இருக்கும் நயன்தாராவுக்கு உணவின் மேல் இருக்கும் காதலும் அதற்காக அவர் போராடுவதும் தான் இப்படத்தின் கதை.
வழக்கம்போல் கதையின் நாயகியாக மாஸ் காட்டி இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் இதன் மூலம் அறுசுவை விருந்தும் படைத்திருக்கிறார். சில இடங்களில் படம் சறுக்கி இருந்தாலும் மொத்தமாக குடும்பங்கள் ரசிக்கும் படியாகவே இருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கிறது.
அன்னபூரணி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
அந்த வகையில் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் முதல் நாளில் 1.5 கோடி வரை வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் நேற்று விடுமுறை இல்லாத நாளாக இருந்த காரணத்தினால் அன்னபூரணி இந்திய அளவில் 0.60 கோடியை தான் வசூலித்திருந்தது.
மேலும் காலை காட்சியில் கணிசமான அளவே கூட்டம் இருந்தது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்களின் வரவு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அப்படி பார்க்கும் போது வார இறுதி நாட்களில் இப்படம் நிச்சயம் கல்லா கட்டிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் சென்னை உட்பட பல இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் இந்த வாரம் வெளியான படங்களின் வசூல் சிறிது தடுமாற்றமாக இருக்கிறது. ஆனாலும் அன்னபூரணி இந்த ரேஸில் ஜெயித்து விடுவார் என்று சினிமா விமர்சகர்கள் ஆணித்தரமாக கூறி வருகின்றனர்.