4 மாதத்திலேயே இரட்டை குழந்தைக்கு தாயான நயன்தாரா.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 வருடம் காதலித்த சமீபத்தில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகப் பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் நடைபெற்றது. மேலும் திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஹனிமூன் சென்று இருந்தனர்.

அதன் பிறகு நயன்தாரா தனது பட வேலைகளில் மிகவும் பிசியாக இருந்தார். அதாவது ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் யாரும் சற்றும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருங்காலத்திற்காக பயிற்சி எடுத்து வருவதாக விக்னேஷ் சிவன் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதற்கான உண்மையான காரணம் இப்போது தான் வெளியாகி உள்ளது. அதாவது விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இது நயன்தாரா ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

அதாவது திருமணமான 4 மாதங்களில் நயன்தாராவுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்ற குழப்பம் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. அதாவது திருமணத்திற்கு முன்பே விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர்.

vignesh-shivan-nayanthara

தற்போது குழந்தை பிறந்தவுடன் எல்லோருக்கும் இந்த இன்பச் செய்தியை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அதில் நயன்தாரா மற்றும் நானும் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மா, அப்பா ஆகி உள்ளோம். இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

vignesh-shivan-nayanthara
vignesh-shivan-nayanthara
vignesh-shivan-nayanthara