படங்கள் ஓடாவிட்டாலும் நயன்தாரா கையில் மட்டும் ஏழெட்டு படங்கள் இருந்து கொண்டே இருக்கிறது. எல்லா படங்களையும் சமாளித்து சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறார். இப்பொழுது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஜோசியம் பார்த்து சில விஷயங்களை பின்பற்றி வருகிறார்.
சமீப காலமாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடித்தாலும் கூட படங்கள் எதுவும் ஓடவில்லை. மற்ற ஹீரோக்கள் படத்தில் ஹீரோயினாக நடித்தால் கூட பரவாயில்லை, சோலோ ஹீரோயின் கதை சரியாக போகாததால் வருத்தமாக இருக்கிறார்.
o2, கனெக்ட், அன்னபூரணி, கல்யாண ஆவணப்படம், டெஸ்ட் என சமீபத்தில் எந்த படங்களும் இவருக்கு ஓடவில்லை. இதனால் இப்பொழுது இவர் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் படமான ராக்காயி படத்தை சற்று ஓரங்கட்டி வருகிறார். இந்த படத்திற்கு சரியாக கால்சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்.
ஹீரோயின் கதைக்களம் சரியாக போகாததால் இப்பொழுது அவர் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் படத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். அந்த படத்திற்கு 15 கோடிகள் சம்பளம் வாங்குவதால் இந்த வருடம் அதற்குத் தான் பெரும்பாலும் கால் சீட் கொடுத்துள்ளார். மீதம் இருக்கும் நாட்களில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகமும் நடிக்கிறார்.
பெயரிடப்படாத மெகா157 படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்க உள்ளார். மெகா ஸ்டாருடன் நடிக்கும் இந்த படம் கை கொடுத்து விட்டால் தெலுங்கு பக்கமும் ஒரு ரவுண்டு வந்துவிடலாம் என திட்டம் போட்டுள்ளார். ஏற்கனவே ராக்காயி படத்தின் டைட்டில் கார்டு டீசர் வெளிவந்து நல்ல எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.