புகைச்சலையும், எரிச்சலையும் கிளப்பும் நயன்தாரா.. கெட்ட ஆட்டம் போடும் லேடி சூப்பர் ஸ்டார்

ஒரு காலத்தில் சினிமா என்பது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் கையில் தான் இருந்தது. ஆனால் இப்பொழுது ஹீரோ, ஹீரோயின் கையில் அது போய்விட்டது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் வியாபாரம் தான். ஹீரோவை வைத்து தான் ஒரு படம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மாற்றத்திற்கு இது தான் காரணம்.

15 ஆண்டுகளாக சக்ஸஸ்ஃபுல் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. நான்கு வருடங்களாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வளம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு படத்திற்கு 10 முதல் 12 கோடிகள் சம்பளம் பெற்று வருகிறார்.

தற்சமயம் நயன்தாரா செய்யும் செயல் ஒன்று மொத்த ஷூட்டிங் யூனிட்டையும் எரிச்சல் அடையச் செய்துள்ளது. சூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடித்து முடித்த காட்சிகளை மானிட்டர் உதவியோடு நன்றாக இருக்கிறதா என உடனே அதில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் பார்ப்பார்கள்.

இப்பொழுது நயன்தாரா இரண்டு மானிட்டர்கள் வைக்க சொல்கிறாராம். ஒன்று இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பார்ப்பதற்கு, மற்றொன்று அவர் கூட வரும் மேக்கப் மேன் மற்றும் ஹேர் ஸ்டைலிஸ்ட் இருவரும்பார்ப்பதற்கு.

அவர்கள் இருவரும் பார்த்த பிறகு தான் ஷாட் ஓகே என்று சொல்கிறாராம் நயன். இப்படி அநியாயத்துக்கு பல விஷயங்களில் தாறுமாறாக நடந்து கொள்கிறாராம். இயக்குனரையும் ஒளிப்பதிவாளரையும் நம்பாமல் அவர் கூட இருக்கும் மேக்கப் ஆர்ட்டிஸ்டுகளை நம்பி இப்படி நடந்து கொள்வது புகைச்சலை கிளப்பி வருகிறது.

Leave a Comment