சமீபகாலமாக நடிகைகள் வெளியிடும் மீ டூ புகார் பற்றிய செய்திகள் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் முன்னணியில் இருக்கும் பிரபலங்களே இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவது சலசலப்பையும் உண்டாக்குகிறது. அந்த வகையில் தற்போது நயன்தாரா திரைப்படத்தில் நடித்த வில்லன் நடிகர் ஒருவரை பற்றி பிரபல நடிகை வெளியிட்டு இருக்கும் செய்தி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
நயன்தாராவின் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் தான் அனுராக் கஷ்யப். பாலிவுட் திரையுலகில் முன்னணி பிரபலமாக இருக்கும் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற பன்முக திறமை கொண்டவர். இவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை பாயல் கோஷ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தமிழில் தேரோடும் வீதியிலே என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் சில தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தற்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் தென்னிந்திய இயக்குனர்கள் பலருடன் நான் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அவர்கள் யாரும் என்னை தொட்டுக் கூட பேசியது கிடையாது.
ஆனால் அனுராக் கஷ்யப் உடன் நடந்த மூன்றாவது மீட்டிங்கிலேயே தன்னை பலவந்தப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இது குறித்து அவர் தெரிவித்து இருந்த புகாருக்கு அனுராக் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் டாப்ஸி உள்ளிட்ட நடிகைகளும் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் அவரைப் பற்றி பாயல் வெளியிட்டுள்ள இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சில நாட்களுக்கு முன்பு கூட அவர் தான் தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாலோ அதற்கு காரணம் அனுராக் தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தான் சாவேன் என கூறியிருந்தார்.
அதை தொடர்ந்து தற்போது அவர் வெளியிட்டுள்ள கருத்தும் பேசும் பொருளாக மாறியுள்ளது. மேலும் இதை பார்த்த ரசிகர்கள் தேவை இல்லாமல் எதற்கு சோசியல் மீடியாவில் இதை கூறுகிறீர்கள் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியது தானே என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் அவர் பப்ளிசிட்டிக்காக இது போன்ற கருத்துக்களை வெளியிடுவதாகவும் கூறுகின்றனர்.