அப்படி என்னதான் ஈகோவோ.. சிம்பு மாதிரி ஐசரி வீட்டு விசேஷத்திற்கு வராதா நயன்

Isari Ganesh: சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதில் ரஜினி, கமல் உட்பட அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

அப்போது ஜெயம் ரவி பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்தது கூட பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் ஐசரி கணேஷ் தன்மகள் திருமணத்தை அம்பானி வீட்டு கல்யாணம் போல் சிறப்பாக நடத்தி முடித்துவிட்டார். 

இது ஒரு பக்கம் இருக்க சிம்பு ஏன் கல்யாணத்துக்கு வரலை என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது. விசாரித்து பார்த்ததில் டி ராஜேந்தருக்கு முறையாக நேரில் சென்று பத்திரிக்கை வைத்துள்ளார் ஐசரி கணேஷ். 

அப்படி என்னதான் ஈகோவோ

ஆனால் அப்போது சிம்பு அங்கு இல்லையாம். இருந்தாலும் தனக்கு போன் செய்து கூறுவார் என அவர் எதிர்பார்த்து உள்ளார். அப்படி செய்யாததால் தான் இந்த திருமணத்திற்கு அவர் வரவில்லை என கூறப்படுகிறது. 

ஒருவேளை பழைய பிரச்சினையின் காரணமாக வந்த ஈகோவா என்று கூட பேசப்பட்டு வருகிறது. அதே போல் நயன்தாரா கூட இந்த திருமணத்திற்கு வரவில்லை. 

ஏனென்றால் ஐசரி கணேஷ் நேரில் வந்து பத்திரிக்கை வைக்கவில்லையாம். கல்யாண பரபரப்பில் முக்கியமானவர்களுக்கு மட்டுமே அவர் நேரில் அழைப்பு விடுத்திருக்கிறார். 

மற்ற பிரபலங்களுக்கு வேறு சிலரை அனுப்பி பத்திரிக்கை வைத்துள்ளார். அதுவும் நமக்கு தெரிந்தவர்கள் தானே கோவிச்சுக்க மாட்டாங்க என்ற உரிமை தான். 

ஆனால் நயன் அதை மரியாதை குறைவாக நினைத்துக் கொண்டு வரவில்லை என்கின்றனர். ஆனாலும் மாலத்தீவில் நடக்கும் நிகழ்வுக்கு நயன்தாரா சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது சினிமா வட்டாரம்.