உருகி உருகி காதல் செய்யும் விக்கி.. குங்குமம், புடவை என வைரலாகும் நயன் போட்டோ

Nayantahra: திகட்ட திகட்ட காதலிக்கும் எத்தனையோ ஜோடிகளை நாம் பார்த்திருக்கிறோம். அதில் அஜித், ஷாலினியின் காதல் வருடங்கள் கடந்தும் நம்மை ரசிக்க வைக்கும். அதே போன்று தான் விக்கி, நயன் காதலும் இருக்கிறது.

பல வருடங்களாக காதல் பறவைகளாக திரிந்த இவர்கள் கடந்த வருடம் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். அதை அடுத்து வாடகை தாய் மூலம் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். அவ்வப்போது அவர்களின் போட்டோக்களும் மீடியாவில் வைரலாகும்.

குங்குமம், புடவை என வைரலாகும் நயன் போட்டோ

vicky-nayan
vicky-nayan

அதேபோன்று விக்கி, நயன் ஜோடியின் போட்டோக்களும் மீடியாவில் வெகு பிரபலம். தங்களுடைய காதல் தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நயன்தாரா தற்போது ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் ஜஸ்ட் லவ் என்ற கேப்ஷன் உடன் தன் கணவருடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து உள்ளார்.

அந்த போட்டோவில் இருவரும் கோவிலில் இருப்பது போன்று தெரிகிறது. அதிலும் நயன்தாரா சிவப்பு நிற புடவையில் நெற்றி வகுட்டில் குங்குமம் என கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறார். அதே போன்று விக்கியும் மஞ்சள் நிற குர்தா அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

உருகி உருகி காதல் செய்யும் விக்கி

nayan-vicky
nayan-vicky

இந்த போட்டோ தற்போது மீடியாவில் கிடு கிடுவென ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நயன்தாராவின் இந்த குத்துவிளக்கு அவதாரத்தை பார்த்த ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். இப்படியாக சினிமா, பிசினஸ் மட்டுமல்லாமல் காதல் வாழ்க்கையையும் ரக ரகமாக கொண்டாடி வருகிறார் நயன்தாரா.