தனி விமானம் கேட்ட நயன்.. தலைவர் பட ஷூட்டிங்கில் இயக்குனருக்கு கொடுத்த டார்ச்சர்

Nayanthara: சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான் நயன்தாரா. ஆனால் அவரை சார்ந்தவர்கள் இப்படி அப்படி என ஓவராக புகழ்வது உண்டு.

சினிமா வட்டாரத்தில் விசாரித்தால் இவர் செய்த அலப்பறைகளை புட்டு புட்டு வைப்பார்கள். அப்படித்தான் வலைப்பேச்சு பிரபலம் அந்தணன் இவரை பற்றிய ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

அண்ணாத்த படப்பிடிப்பு நடந்த சமயத்தில் ரஜினிக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு இருக்கிறது. வெளியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றால் தேவையில்லாத செய்திகள் பரவும் என யோசித்துள்ளனர்.

அதனால் ஷூட்டிங் நடந்த ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இருந்த மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை செய்திருக்கின்றனர்.

தனி விமானம் கேட்ட நயன்

இதை கேள்விப்பட்ட சன் பிக்சர்ஸ் தலைவர் தான் முக்கியம். அவர் உடல் நலத்திற்கு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என இயக்குனரிடம் சொன்னார்களாம்.

சிறுத்தை சிவாவும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். அப்போது ரஜினி சிகிச்சையில் இருந்த சமயத்தில் நயன்தாரா கேரளாவுக்கு சென்றுள்ளார்.

மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது தனி விமானம் இருந்தால் தான் வருவேன் என்று சொன்னாராம். ஆனால் சன் பிக்சர்ஸ் இதற்கெல்லாம் சம்மதிக்க மாட்டார்கள்.

இயக்குனர் இதை சொல்லியும் கூட நயன் வர மறுத்திருக்கிறார். அதை அடுத்து சிறுத்தை சிவா கலை மற்றும் கேமரா துறையிடம் சொல்லி அங்கு இருந்த செலவுகளை குறைத்து அப்படி இப்படி என பணம் புரட்டி தனி விமானத்தில் நயன்தாராவை வர வைத்துள்ளார்.

இந்த விஷயத்தை அந்தணன் கூறியுள்ளார். பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் எல்லா விஷயத்திலும் அட்ஜஸ்ட் செய்கிறார்கள். ஆனால் நண்டு சிண்டு எல்லாம் அலப்பறை கொடுக்கிறார்கள் என கலாய்த்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தில் தன் பெயரை லேடி சூப்பர் ஸ்டார் என போட நயன் குடைச்சல் கொடுத்ததாக ஒரு தகவல் உள்ளது. அதில் இந்த சம்பவமும் அவர் மேல் மற்றொரு கரும்புள்ளியாக மாறியுள்ளது.